போனஸ் பேச்சு தோல்வி: அரசு ஊழியர்கள் 23ம் தேதி முதல் போராட்டம்
சென்னை:
தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ் குறித்து தமிழக அரசுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தைதோல்வியடைந்ததைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபடவுள்ளனர்.
அரசுத் தரப்பில் நிதித்துறை செயலாளர் நாராயணன் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் நான்குதொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது தீபாவளி போனஸ், பொங்கல்முன்பணம், பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து வரும் 23ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் கடுமையாகப் போராடியும் கூட அவர்களுடைய போனஸ் கோரிக்கையை அரசுகண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ் ஊழியர்களும் கோரிக்கை:
இதற்கிடையே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றுபோக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர். செளந்தரராஜன் தமிழக அரசிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் அவர் பேசுகையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20சதவீதத்திற்கு குறைவாக போனஸ் கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று கூறினார்.
கடந்த ஆண்டு போனஸ் பிரச்சினை காரணமாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம்தீபாவளியைத் தாண்டியும் நீடித்ததும், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் ஆகியவற்றை வைத்து ஸ்டிரைக்கை அரசுமுறியடித்ததும் நினைவிருக்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications