காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: கர்நாடகம் பதில் மனு
டெல்லி:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என கர்நாடகம் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலேயே கர்நாடகம் மனு தாக்கல் செய்ய உள்ளது.
கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு இன்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா,அமைச்சர் பாட்டீல் மற்றும் 3 அதிகாரிகள் இன்று தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தங்களது மனுவில், காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆணையம் கூடி விவாதித்துவருகிறது. கண்காணிப்புக் குழுவும் காவிரி அணைகளை பார்வையிட்டு வருகிறது. இந்த நேரத்தில் கர்நாடகத்துக்குஉச்ச நீதிமன்றம் என்ற உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி நாங்கள் தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டோம். ஆனால், பல்வேறுகாரணங்களால் அந்த நீர் மேட்டூர் போய்ச் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டது(!!!!).
இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட உத்தரவிட்டாலும் அதைச் செய்ய முடியாத நிலையில்நாங்கள் இருக்கிறோம். எங்கள் அணைகளில் நீர் இல்லை.
இவ்வாறு கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரும் தங்கள் பதில் மனுவில் தெரிவிக்க உள்ளதாக கர்நாடக அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
இந் நிலையில் தமிழகத்தில் மேட்டூர் மற்றம் காவிரி பாசனப் பகுதிகளை கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட மத்தியநீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமி தலைமையிலான காவிரி கண்காணிப்புக் குழுவினர் இன்று தங்களதுஅறிக்கையை பிரதமரிடம் சமர்பிக்கின்றனர்.
நாளை இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதையடுத்து கர்நாடகம் மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை உச்ச நீதிமன்றம்விசாரிக்க உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications