புலிகளுக்கு ஆதரவு: பொடா சட்டத்தின் கீழ் சென்னை பல் டாக்டர் கைது
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பல் டாக்டர் ஒருவரை இன்று க்யூ பிரிவுபோலீசார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை-அண்ணாநகரைச் சேர்ந்த பல் டாக்டரான தாயப்பன், பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்துடன்நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி இன்று காலை அவரது வீட்டில் க்யூ பிரிவுப் போலீசார்சோதனையிட்டனர்.
பின்னர் டாக்டர் தாயப்பனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த கூட்டத்தில் டாக்டர் தாயப்பனும் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகஅவரைக் கைது செய்துள்ளதாகப் போலீசார் கூறினர்.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை14ஆக உயர்ந்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 10 பிரமுகர்கள், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன், அதன் பொதுச் செயலாளர்களான சுப. வீரபாண்டியன் மற்றும் பரந்தாமன் ஆகிய 13பேரும் ஏற்கனவே பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications