இமாம் அலி வேட்டை: 33 போலீசாருக்கு "அண்ணா பதக்கம்"
சென்னை:
பெங்களூரில் இமாம் அலி உள்ளிட்ட 5 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற 33 போலீசாருக்கு அண்ணாப் பதக்கம்வழங்கி, தலா ரூ.25,000 பரிசும் அளித்து கெளரவித்த முதல்வர் ஜெயலலிதா, தாக்குதலுக்குத் திட்டமிட்ட 5போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 38 காவல்துறையினரையும் சென்னை கோட்டைக்கு வரவழைத்து அவர்களுக்குபாராட்டு தெரிவித்தார் ஜெயலலிதா.
பின்னர் 25 அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட 33 போலீசாருக்கும் தீரச் செயலுக்கான அண்ணாவிருதையும், தலா ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கி கெளரவித்தார்.
மேலும் இந்தத் தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு திறமையாகத் திட்டமிட்ட கோயம்புத்தூர் டி.ஐ.ஜி.அஷுகோஷ் சுக்லா, மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஷகீல் அக்தர் உள்ளிட்ட ஐந்து போலீஸ்அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைப்பதற்காக அவர்களுடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும்ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத் தவிர இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து கைவிரல்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளசப்-இன்ஸ்பெக்டர் செல்வம் டேவிட்டின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றுஅறிவித்த ஜெயலலிதா, அவருக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையையும் வழங்கினார்.
இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியின் போது மாநில உள்துறை செயலாளர் முனீர் ஹோடா, டி.ஜி.பி. நெய்ல்வால்மற்றும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோரும் இருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications