மாண்டியாவில் கலாட்டா ஆரம்பம்: தமிழக பஸ்கள் ரத்து
மாண்டியா:
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று இன்று பிற்பகில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரத்தில்மாண்டியாவில் சாலை மறியல், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
நூற்றுக்கணக்கானோர் அடங்கிய பல கும்பல்கள் சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டு எரித்து வருகின்றனர். கடைகள்மீதும் கல் வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பெங்களூர்- மைசூர் இடையிலான பஸ் போக்குவரத்து அடியோடுபாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் வந்த வழியிலேயே திரும்பிக் கொண்டுள்ளன. முதல்வர் கிருஷ்ணா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நாளை பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவிவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறினார்.
எக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரைத் தரக் கூடாது. தேவைப்பட்டால் தனது பதவியைக் கூட அவர்ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து மைசூருக்கான தமிழக பஸ்களை போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்த உள்ளன.நிலைமைக்கேற்ப பெங்களூர் பஸ்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
மீண்டும் பெங்களூர், மைசூர், மாண்டியா தமிழர்களிடையே நிம்மதியின்மை பரவ ஆரம்பித்துவிட்டது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications