ரஜினியின் ஞான உபதேசம்: கர்நாடகத்துக்கு எதிராக போராட வேண்டாம் என்கிறார்
சென்னை:
காவிரி விவகாரத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதில் சொல்வேன் என்று வசனம் பேசிய ரஜினி பல்டி அடித்துள்ளார்.
கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் திரையுலகினர் நடத்த உள்ள போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகினர் நடத்தவுள்ள நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்றுகேட்டதற்கு "சொல்ல வேண்டிய நேரத்தில் பதில் சொல்வேன்" என்று நேற்று கூறியிருந்தார் ரஜினிகாந்த்.
ஆனால், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு தற்போதுள்ள காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் எனது கருத்தைத் தெரிவிக்கக்கடமைப்பட்டுள்ளேன்.
முதலில் நான் ஒரு இந்தியன், இதற்குப் பிறகு நான் ஒரு தமிழன். காவிரி விவசாய மக்களுக்காக தமிழ்த் திரையுலகம் குரல் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன்.ஆனால், அதை வழிப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை சம்பந்தபட்டவர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது.
ஏனெனில் நாம் எடுக்கும் எந்த முயற்சியும் பிரச்சனைகளை தீர்ப்பதற்குத் தான் உதவ வேண்டுமே தவிர, பிரச்சனையை பெரிதாக்கிவிட இடம் தரக்கூடாது.
காவிரி நதி நீர்ப் பிரச்சனை காலம் காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நதிநீர் ஆணையம், கண்காணிப்புக்குழு, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம்ஆகியவற்றின் முயற்சி, பரிந்துரை, ஆணை இவற்றால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனது துரதிஷ்டவசமானது.
உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் கூட தமிழக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு காண எனக்குத் தெரிந்த ஒரே வழி, கங்கை- காவிரியை இணைப்பது தான். குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவதுஇணைப்பது தான் என்பது எனது தாழ்மையான கருத்து.
இதனை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும், தங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டினை மறந்து, அனைத்து மாநிலமக்களையும் ஒன்று சேர்த்து தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இணைந்து நிற்கும் பட்சத்தில் நான் எனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கதயாராக இருக்கிறேன்.
விரைவில் பிரதமரை சந்தித்து இது குறித்து பேச இருக்கிறேன்.
ஜெய்ஹிந்த்
இப்படிக்கு,
ரஜினிகாந்த்.
இவ்வாறு ரஜினியின் அறிக்கை கூறுகிறது.
நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டபோது, சொல்ல வேண்டிய நேரத்தில்இதற்கு நான் பதில் சொல்வேன் என்று ரஜினி பதில் கூறியிருந்தார்.
இன்று தனது நிலையில் இருந்து அவர் மாறியிருக்கிறார். நெய்வேலி போராட்டத்தையே வாபஸ் பெறச் சொல்லிதமிழர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
மாநில முதல்வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்தும் கூட தமிழகத்துக்கு நியாயம்கிடைத்தபாடில்லை. பிரதமர் சொல்வதையே கர்நாடகம் ஏற்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தையும் மதிக்கமறுக்கிறது.
இந் நிலையில் இவர் போய் பிரதமரிடம் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.
நதிகள் இணைப்பு என்பது மிக நீண்ட காலத் திட்டம். இதை அமல்படுத்த நினைத்து உடனே பணிகளைஆரம்பித்தால் கூட அது நிறைவேற குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாவது ஆகும்.
இப்போது சோற்றுக்கு இல்லாமல் தமிழக விவசாயி உயிருக்குப் போராடுவது தான் விவகாரமே. இப்போது போய்நதிகளை இணைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இவர் பேசுவது இப்போதைக்கு கர்நாடகத்தைஎப்படியாவது காப்பாற்றிவிட இவர் முயல்வதாகத் தான் கருத வேண்டி இருக்கிறது.
தமிழகத்துக்கும், விவசாயிகள், கலை உலகினருக்கு அவர் வழங்கியுள்ள இந்த ஞான உபதேசம் அவரது கன்னடஇனப்பற்றைத் தான் எடுத்துக் காட்டுகிறது.
இப்போது கர்நாடகத்துக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்துவதை எதிர்க்கும் இவர் தமிழகத்துக்கு நீர் விடக் கூடாது என்றுராஜ்குமார் தலைமையில் பெங்களூரில் அனைத்து நடிகர்களும் போராட்டம் நடத்தியபோது இவர் ராஜ்குமாரிடம் பேசி அதைஏன் தடுக்கவில்லை என்று தெரியவில்லை.
அப்போது இவரது இந்த ஜெய்ஹிந்த் தேசப்பற்று எங்கே போனது?
ரஜினி கலந்து கொள்ள வேண்டும்:
இதற்கிடையே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் நடத்தவுள்ளஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் நடிகர் ரஜினி காந்த் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்படபாதுகாப்புக் கழகத் தலைவர் கே.ராஜன் கூறியுள்ளார்.
ராஜனின் தமிழக மக்கள் இயக்கத்தின் சார்பில் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டம்எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ராஜன் பேசுகையில், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பார்த்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications