கிராமத்தைத் தேடும் தென் ஆப்பிரிக்க தமிழர்
டர்பன்:
தென் ஆப்பிரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவரான ஜொடி கோலப்பன் என்ற தமிழர், தமிழகத்தில் உள்ளதன்னுடைய மூதாதையர்களின் ஊரைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் தான் தென் ஆப்பிரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவராக கோலப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர் கோலப்பன். ஆனால் அவருடைய மூதாதையர்கள் இந்தியாவின்தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
பல தலைமுறைகளுக்கு முன்பாகவே அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட்டனர். இவர்களைப்போலவே ஆயிரக்கணக்கான தமிழகத்திலிருந்து அந்நாட்டுக்கு இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வசித்துவருகின்றனர்.
இந் நிலையில் தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த தமிழக கிராமத்தைக் கண்டறியும் முயற்சியில் தற்போதுகோலப்பன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
"எப்படியாவது அந்தக் கிராமத்தைக் கண்டுபிடித்து என்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்பதே என்னுடைய தீராத ஆசை" என்கிறார் கோலப்பன்.
தனது கிராமத்தைக் அடையாளம் காண விரைவில் தமிழகம் வர உள்ளார் கோலப்பன்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 முதல் 11ம் தேதி வரை இந்திய வெளியுறவுத்துறை டெல்லியில் நடத்தும்வெளிநாட்டு இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளதாகக் கூறும் கோலப்பன்,அதற்கு முன்னதாகத் தன்னுடைய மூதாதையர்களின் கிராமத்தைக் கண்டுபிடித்து விடும் ஆவலில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எழுத்துரிமை, பேச்சுரிமை, குடியுரிமை உள்ளிட்ட எந்தஉரிமையையும் சிறிதழவும் இழந்து விடக் கூடாது என்பதில் தான் மிகவும் தீவிரமாக இருப்பவர் கோலப்பன்.
இதுவரை தென் ஆப்பிரிக்க மனித உரிமை கமிஷனின் துணைத் தலைவராக இருந்து வந்தார். இப்போதுதலைவராகியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைத் தாக்கி பாடல்கள் எழுதிய டர்பனைச் சேர்ந்த பாடலாசிரியருக்குஎதிராக வழக்கு தொடர்ந்து அவருக்கு தண்டனை வாங்கித் தந்து அந்நாட்டு இந்திய வம்சாவளியினரிடையேபிரபலமானவர் கோலப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைவிட்டுப் போய் பல தலைமுறைகள் கடந்துவிட்டதால் தமிழ்நாட்டுடனான உறவை இவரது முந்தைய தலைமுைறைகளேஇழந்துவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் தனது வேர்களை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கோலப்பன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications