நெடுமாறனை சந்திக்க இலங்கை தமிழ் எம்.பிக்கு அனுமதி மறுப்பு
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழ. நெடுமாறனைப் பார்க்கஇலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நெடுமாறனை சந்திப்பதற்காக பரராஜசிங்கம் நேற்று கடலூர் வந்தார். ஆனால் அவரை அனுமதிக்க சிறைஅதிகாரிகள் மறுத்து விட்டனர்.
மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெற்று வந்தால்தான் நெடுமாறனைப் பார்க்க முடியும் என்று அவர்கள்கூறி விட்டனர். இதையடுத்து நெடுமாறனை சந்திக்காமலேயே பரராஜசிங்கம் திரும்பினார்.
வெளியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல்இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது.
தாய்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கெடுக்க வேண்டும். இலங்கை புத்த மதத்துறவிகளும் இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முழு ஆதரவு கொடுக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications