120 பஸ்கள்... கருப்புச் சட்டைகள்: போராட தயாராகிறது திரையுலகம்
சென்னை:
தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் எழுச்சிக் கொந்தளிப்பாக நெய்வேலியில் நடக்கப்போகும் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்காக கலைஞர்கள் அணிந்து கொள்ள கருப்புச் சட்டைகள்மற்றும் கைகளில் ஏந்திச் செல்ல கருப்புக் கொடிகள் தயாராகி வருகின்றன.
கன்னட நடிகர்களின் அநாரீகமான போராட்டத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடகத்திற்குமின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நெய்வேலியில் வருகிற 12ம் தேதி அலைகடலென திரண்டுஆர்ப்பாட்டம், பேரணியும் நடத்தப் போகிறார்கள் திரையுலக கலைஞர்கள்.
ரஜினி காந்தை தூசாக மதித்து, ஓரம் கட்டி விட்டு அத்தனை கலைஞர்களும் தமிழ் உணர்வோடு இந்தப்பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
கலைஞர்கள் போராட்டத்தில் கருப்புச் சட்டைகளுடன் கலந்துகொள்கின்றனர். இதற்காக கருப்புச் சட்டைகள் தைக்கஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டைகளின் பின்னால் காவிரிப் பிரச்சினைக்காக போராடும் கலைஞர்கள் என்ற வாசகம் இடம் பெறுகிறது.அத்தோடு கையில் பிடித்துக் கொள்ள கருப்புக் கொடிகளும் தயார் செய்யப்படுகின்றன.
முதலில் சென்னையிலிருந்து நடைப் பயணமாக நிெய்வேலி செல்ல கலைஞர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடக் காரணமாகி விடக் கூடாது என்பதால் இங்கிருந்துநெய்வேலிக்குப் பஸ்களில் போய் அங்கு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 120 ஆம்னி பஸ்களும் புக் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு கலையுலகம் ஆரவாரத்துடன், தமிழ் உணர்வுடன் போராட்டத்திற்குத்தயாராகிக் கொண்டிருப்பது தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து வருவது இயக்குனர் இமயம் தான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications