கர்நாடகத்தின் பேச்சை கேட்க வேண்டாம்: பிரதமருக்கு ராமதாஸ் தந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடகத்தின் பேச்சைக் கேட்டு காவிரி ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகம் மதித்து நடக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடத்தைநீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

நீதிமன்றத்தின் ஆணையைத் திருத்துவதற்காக காவிரி ஆணையத்தைக் கூட்டச் சொல்கிறது கர்நாடகம். இதைக் கேட்டு நீங்கள்ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துக்கு பாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது.

24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. அதுவரை காவிரி ஆணையத்தை கூட்டவே கூடாது.

தமிழகம் தன் குறுவை சாகுபடியை இழந்துவிட்டு நிற்கிறது. அடுத்து சம்பா பயிரை நட எங்களுக்கு நீர் வேண்டும். இதை கண்காணிப்புக்குழுவினர் உங்களிடம் கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதை கர்நாடகம் உணர்ந்து உடனே நீரைத் திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு தனது தந்தியில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+