முதுமலையில் காயமடைந்த பெண் யானை பரிதாப சாவு
முதுமலை:
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப் பகுதியில் புரையோடிப் போன புண் காரணமாக உயிருக்குப் போராடி வந்தபெண் யானை ஒன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தது.
முதுமலை வனப் பகுதியில் சில நாட்களுக்கு ன்பு ஒரு பெண் யானை, நொண்டியபடி நடந்து வந்தது. இதைப்பார்த்த சிலர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தனர்.
புண் காரணமாகவே அது நொண்டுகிறது என்பதை அறிந்த வனக் காவலர்கள் யானையைப் பிடிக்க முயற்சிசெய்தனர். கடந்த நான்கு நாட்களாக 30க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் வேறு சில யானைகள் மற்றும்மருந்துகளுடன் அந்த யானையைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யானை சிக்கியது. மயக்க மருந்து கொடுத்து அதை மயக்கப்படுத்திய பின்,யானையின் காலை ஆராய்ந்தபோது அதில் புழுக்கள் நெளியும் அளவுக்கு புரையோடிப் போய் இருந்தது தெரியவந்தது.
விலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கும் பொறியில் யானையின் கால் சிக்கியுள்ளது. அந்தக் கம்பி மிகவும்இறுக்கமாக இருந்ததால், யானையின் காலுக்குள் போய் புண் ஏற்பட்டு புரையோடி விட்டது. அந்த கம்பிஅகற்றப்பட்ட பின் மருந்து போடப்பட்டது.
இருப்பினும் புண் மூலம் ஊடுருவிய புழுக்கள் அந்த யானையின் உடலுக்குள் பல இடங்களுக்கும் பரவிவிட்டதால், சிகிச்சை பலனளிக்காமல் அது பரிதாபமாக இறந்தது.
பெண் யானை ஒன்று இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் வனத்துறை ஊழியர்களிடையேயும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications