டெல்லியில் ரஜினியின் அடுத்த "பல்டி": ரிஷிகேஷ் தான் போகிறாராம்
டெல்லி:
காவிரி விவகாரம் தொடர்பாக வாஜ்பாயைச் சந்திப்பதற்காகத் தான் நடிகர் ரஜினிகாந்த் செல்கிறார் என்றபரபரப்பான தகவல்களுக்கிடையில் இங்கு வந்த அவர், டெல்லி வழியாக ரிஷிகேஷ் போவதற்காகத் தான் இங்குவந்து சேர்ந்துள்ளதாகக் கூறினார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரிடம்விவாதிப்பதற்காக ரஜினி டெல்லி செல்கிறார் என்று இன்று காலையிலேயே சென்னையில் பரபரப்பான தகவல்கள்வெளியாகின.
அதை நிரூபிப்பது போல ரஜினியும் தன் மனைவி லதா ரஜினிகாந்த்துடன் இன்று காலை டெல்லி கிளம்பினார்.
டெல்லி கிளம்பும் முன் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரியில்தமிழகத்திற்குக் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி தமிழ் திரையுலகினர் வரும் 12ம் தேதிநெய்வேலியில் நடத்தும் முற்றுகைப் போராட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்வேன். ஆனால் இந்தப் பேரணிப்போராட்டத்தால் ரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டால் அதில் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் என்ன பேசப் போகிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்குஒவ்வொன்றையும் இங்கே நான் உங்களிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டு விறுவிறுவென்றுவிமானம் நோக்கி நடந்து சென்று விட்டார்.
இந்நிலையில் டெல்லி வந்து சேர்ந்த ரஜினியிடம் அவருடைய வருகைக்காகவே விமான நிலையத்தில் காத்திருந்தநிருபர்களிடம் அவர் எதுவும் பேசத் தயாராக இல்லை.
""நான் டெல்லி வழியாக ரிஷிகேஷ் போய்க் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்"" என்று கூறினார்.
காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, என்னுடைய முடிவை நான் சென்னையிலேயே கூறிவிட்டேன்என்று பதில் கூறிவிட்டு வேறு எந்தக் கேள்விகளுக்கும் காத்திராமல் விடுவிடுவென்று போய்விட்டார்.
வாஜ்பாயைச் சந்திப்பதற்காக அவர் பிரதமர் அலுவலகத்தில் ஏதாவது "அப்பாயின்ட்மெண்ட்" வாங்கியுள்ளாராஎன்பது குறித்தும் சரியாகத் தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications