நெய்வேலி போராட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பு
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்துவிடக் கோரி தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் நடத்தும்பேரணிப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த்தும் கமலஹாசனும் கலந்து கொள்கின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான "தமிழ் மக்கள் பாதுகாப்பு அணி" என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு,வரும் 12ம் தேதி நெய்வேலியில் முற்றுகைப் பேரணிப் போராட்டம் நடத்துவது என்று திரையுலகினர் முடிவுசெய்தனர்.
ஆனால் தமிழ் திரையுலகினர் தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினி அறிக்கைவெளியிட்டார்.
ரஜினியின் இந்த அறிக்கைக்கு தமிழ் திரையுலகினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழகத்தின் பலஇடங்களிலும் ரஜினி ரசிகர்களே கூட அவருக்க எதிராகப் போராட்டம் நடத்தினர். ரஜினியின் கொடும்பாவிகளும்ஏராளமான இடங்களில் எரிக்கப்பட்டன.
இவ்வாறு ரஜினிக்கு எதிராகக் குரல் வலுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அவர் தற்போது கொஞ்சம் இறங்கிவந்துள்ளார்.
நேற்று இரவு நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில், வரும் 12ம் தேதி தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில்நடிகர் சங்கம் முழுமனதுடன் கலந்து கொள்கிறது என்றும், ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர்களும் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் சரத்குமார் தலைமையில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் ரஜினி, கமல்,சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், கார்த்திக், வடிவேலு, ராம்கி உள்ளிட்ட பல நடிகர்களும், மனோரமா, ராதிகா,கோவை சரளா, ரேவதி, விந்தியா, காந்திமதி, சச்சு உள்ளிட்ட பல நடிகைகளும் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவிலேயே முழுக்க முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜூன், முரளி, பிரபுதேவா, பிரகாஷ் ராஜ்போன்ற நடிகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லண்டனில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்த்திடம் சரத்குமார்செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி நடிகர் சங்கமும் கட்டாயம்இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்று சரத் அறிவித்தார்.
""நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அந்த வகையில்தான் ரஜினியும் தன் கருத்தைத் தெரிவித்தார். ஆனால் தற்போது எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளார்அவர். வரும் 12ம் தேதி நடக்கும் போராட்டத்தில் அவரும் கமலும் கலந்து கொள்வார்கள்"" என்றார் சரத்.
கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த ரஜினி நிருபர்களிடம் கூறுகையில்,
எதைச் செய்தாலும் ஒன்றாக இருந்தே நாங்கள் செய்வோம். தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும்.
ஆனால் நீர் கேட்டுப் போராடுவதால் ரத்த ஆறு ஓடிவிடக் கூடாது என்பதே என் கருத்து.
இருந்தாலும் நடிகர் சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றார்.
""போராட்டமே தேவையில்லை என்பது தான் என் கருத்து. இருப்பினும் அதில் நான் கலந்து கொள்வேன்"" என்றுகமல் கூறினார்.
முன்னதாக நேற்று பிற்பகலில் நடிகர் சங்கத்தில் வைத்து ரஜினியும் பாரதிராஜாவும் சந்தித்துப் பேசினர். நெய்வேலிபோராட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அப்போது ரஜினி கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த பாரதிராஜா, "இது உணர்வு பூர்வமாக நாம் நடத்தும் போராட்டம். இவ்வாறு போராடுவதால்நாம் கர்நாடக அரசுடன் சண்டைக்கு நிற்கவில்லை.
நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அடையாளமாகத் தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு தமிழகத்தில்உள்ள விவசாயிகள், சில அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சில பொதுநல அமைப்புகள் ஆகியவை ஆதரவுதெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது. மிகவும் அமைதியான முறையில் நடைபெறவுள்ளஇந்தப் போராட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்" என்றார்.
பாரதிராஜாவின் இந்த நீண்ட விளக்கத்தைக் கேட்ட ரஜினி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். அதன்பின்னர் பாரதிராஜா கிளம்பிச் சென்று விட்டார். அதன் பின்னர் போராட்டம் குறித்து ரஜினியிடம் சரத்தும் விளக்கிக்கூறினார்.
இதன் பிறகு தான் நேற்று மாலை நடிகர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி நெய்வேலி போராட்டத்திலும்கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications