தமிழ்நாட்டுக்கு எதிரான யாத்திரை தொடங்கினார் கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் தீவிரமாகியுள்ள கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தனதுகாவிரி பாத யாத்திரையை இன்று காலை தொடங்கினார்.
இந்த யாத்திரை வரும் வழியில் வசிக்கும் தமிழர்கள் கடும் அச்சத்தில் ஆழந்து போயுள்ளனர்.
காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுள்ளார் கிருஷ்ணா. இதனால் அவரை உச்சநீதிமன்றம் பதவி விலகச் சொல்லவோ அல்லது அவரது ஆட்சியைக் கலைக்கவோ பரிந்துரை செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.
அரசியல் யாத்திரை:
காவிரியை வைத்து தன்னை அடுத்த தேர்தலுக்குத் தயார் செய்து கொள்ளும் வகையில் குஜராத் நரேந்திர மோடி ஸ்டைலில் பாதயாத்திரை தொடங்கியுள்ளார் கிருஷ்ணா. இதன்மூலம் காவிரியை வைத்து தன்னை அடுத்த தேர்தலுக்குத் தயார் செய்து கொள்ளும்வேலையில் இறங்கியுள்ளார்.
டீசண்ட் அரசியல்வாதி என்று கருதப்பட்ட கிருஷ்ணா தன்னை பங்காரப்பா அளவுக்கு தாழ்த்திக் கொண்டுள்ளார். தமிழர்களுக்குஎதிராக காவிரி கலவரத்தை அரசே முதன்முதலில் நடத்தியது பங்காரப்பாவின் காலத்தில் தான். நூற்றுக்கணக்கான தமிழர்களைஅவரது ஆதரவாளர்களும் ரெளடிளும் போலீசார் உதவியுடன் கொலை செய்தனர்.
இப்போது கிருஷ்ணாவும் கிட்டத்தட்ட அதே பாதையைத் தேர்ந்தெடுத்து வருகிறார். ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் மாண்டியா,மைசூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் அவர் தனது பாதயாத்திரையை நடத்த உள்ளார்.
இங்கு நடந்து வரும் கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் அதை இன்னும் கொஞ்சம் தூண்டிவிடும் வகையில்இந்தப் பேரணியைத் தொடங்கியுள்ளார்.
கர்நாடகத்தில் பதற்றம்:
இந்தப் பேரணியால் கர்நாடகம் முழுவதுமே பதற்றம் நிலவுகிறது.
இன்று காலை 7 மணிக்கு மைசூர் ரோட்டில் உள்ள ராஜராஸ்ேவரி ஆலயத்தில் தனது மனைவி பிரேமாவுடன் சென்று சிறப்புப்பூஜை நடத்திவிட்டு பாதயாத்திரையை கிருஷ்ணா தொடங்கினார்.
அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை தரவும் மக்களிடையேநம்பிக்கையை ஊட்டவும் இந்தப் பாத யாத்திரையை நடத்துகிறேன் என்றார்.
அப்போது கிருஷ்ணாவுக்கு ஆதிசுன்சுனகிரி மடத்தின் (கிருஷ்ணாவின் ஜாதியான ஒக்கலிகா பிரிவின் மடம்) தலைவர்பாலகங்கதரநாத் சுவாமியும் உடனிருந்தார். இந்த ஊர்வலத்தில் ரஜினியின் பல தமிழ் படங்களில் தலைகாட்டிய நடிகர்அம்பரீசும் கலந்து கொண்டுள்ளார். சில அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஊர்வலம் பெங்களூர் பல்கலைக்கழக வளாகத்தை அடைந்தபோது ஞான பீட விருது பெற்ற இலக்கிய எழுத்தாளர் டாக்டர்யூ.ஆர். அனந்தமூர்த்தியும் இதில் கலந்து கொண்டார்.
சாமியார்கள் முதல் நடிகர்கள் வரை..:
இதன்மூலம் தமிழகத்துக்கு எதிராக கர்நாடக அரசியல்வாதிகள், நடிகர்கள், விவசாயிகள், சமூக விரோதிகள் தவிர சாமியர்களும்,இலக்கியவாதிகளும் ஒன்று திரண்டுள்ளனர்.
காலை 10 மணியளவில் கெங்கேரியில் தனது காலை உணவை முடித்துக் கொண்ட கிருஷ்ணா தனது ஊர்வலத்தைத் தொடர்ந்தார்.பிதாதி என்ற இடம் வரை இன்று அவர் செல்கிறார். இரவு அங்கு தங்குவார். நாளை ராமநகரம் நோக்கி 16 கி.மீ தூரம் நடப்பார்.
அவர் சென்ற வழியெல்லாம் மக்கள் தமிழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த பாத யாத்திரை 8 நாட்கள் நடக்கிறது. தினமும் 15 முதல் 20 கி.மீ. வரை அவர் யாத்திரை செல்கிறார். மொத்தம் 129 கி.மீ.தூரம் இந்த ஊர்வலம் நடக்கிறது.
தனது சொந்த மாவட்டமான மாண்டியா வழியாக கிருஷ்ணா செல்கிறார். கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு, கபினிஅணைக்கட்டுக்கும் சென்று விவசாயிகளைச் சந்தித்து வீர உரை ஆற்ற உள்ளார்.
இதுவரை எல்லா வேலைகளையும் எதிர்க் கட்சிகளுடன் பேசியே செய்து வந்த கிருஷ்ணா இந்த பாதயாத்திரையை மட்டும்திடீரென யாருடனும் ஆலோசிக்காமல் முடிவு செய்தார்.
உச்ச நீதிமன்றத்துக்கு சவால்
இதனால் எதிர்க் கட்சிகளிடையே இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி விஷயத்தை வைத்து தங்களைஅரசியலில் ஓரம்கட்ட கிருஷ்ணா முயல்வதாக அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
தமிழகத்துக்கு நீர் விடுமாறு உச்ச நீதமன்ற உத்தரவு வந்தவுடன் நீர் தர மாட்டேன் என்று அறிவித்த கிருஷ்ணா அடுத்த சில மணிநேரத்தில் இந்த யாத்திரையை அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்துக்கு சவால்விட்டுள்ளார் கிருஷ்ணா.
பெங்களூரில் கலாட்டா:
இந்நிலையில் இன்று மாலை பெங்களூரில் உள்ள எம்.ஜி. ரோடு, ரிச்மோண்ட் சர்க்கிள் ஆகிய இடங்களில் இன்று மாலை ஒருகும்பல் திடீரென்று கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications