நெய்வேலி மின்சாரத்தை தடுக்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

வறண்ட காவிரியைத் தந்த கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று பாரதிராஜா உள்ளிட்டோர் கூறினாலும்கூட, கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை.

கர்நாடகத்திற்கு மின்சாரத்தைத ரத்து செய்யக் கோரி கலையுலகின் சார்பில் நெய்வேலியில் 12ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் ஆதரவு குவிந்து வரும் நிலையில், உண்மையிலேயேநெய்வேலி மின்சாரத்தை நிறுத்த முடியுமா என்ற விவாதமும் சூடு பிடித்துள்ளது.

நெய்வேலியில் உள்ள இரண்டு சுரங்கங்களில் இருந்து லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி எடுக்கப்பட்டுஅதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

இங்கு இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. முதல் நிலையத்தில் மொத்தம் 9 பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் முழுவதும் தமிழகத்தின் உபயோகத்திற்காகபயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது உற்பத்தி நிலையத்தின் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இது தான் தென்மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தென்னகமின் கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 441 மெகாவாட் மின்சாரமும், ஆந்திராவிற்கு 277மெகாவாட் மின்சாரமும், கர்நாடகத்திற்கு 199 மெகாவாட் மின்சாரமும், கேரளாவிற்கு 153 மெகாவாட் மின்சாரமும்,பாண்டிச்சேரிக்கு 80 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்படுகிறது.

கர்நாடகத்திற்கு வழங்கப்படும் 199 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தக் கோரித் தான் வரும் 12ம் தேதிதிரையுலகினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதுதவிர கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்தும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் கர்நாடகத்திற்குவழங்கப்படுகிறது. இந்த இரண்டு மின் நிலையங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. மின்சாரத்தைநிறுத்த வேண்டும் என்றால் அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது.

ஆனால் தென்னக மாநிலங்களுக்கிடையே மின் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் உள்ளதால் மாநில அரசாலும்,மத்திய அரசாலும் மின்சாரத்தை நிறுத்த முடியாது என்பதே உண்மை.

ஒரு வேளை தமிழகம் கூடுதலாக மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் கூட மின் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுஐந்து தென் மாநிலங்களிலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மூழ்க நேரிடும்.

இந்த நிலையில், நெய்வேலி மிகவும் பாதுகாப்புக்குள்ளான பகுதி என்பதால் இங்கு போராட்டம் நடத்தஅனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கும், நெய்வேலி நகரிய நிர்வாகத்திற்கும் நெய்வேலி அனல்மின்நிலைய தலைவர் ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+