போராட்டத்தில் இருந்து தப்ப ரிஷிகேஷில் பதுங்கும் ரஜினி
சென்னை:
தமிழகத்தையும் தமிழர்களையும் தொடந்து குழப்பி வருகிறார் ரஜினி.
வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று தனது சொந்த ஊரில் வாய் கிழியப் பேசிய ரஜினிகாந்த், காவிரி விவகாரம்ஆரம்பித்தபோது ரிஷியாக மாறி மெளன விரதம் மேற்கொண்டார். தமிழகத்துக்கு எதிராக அவரது குரு ராஜ்குமார் பேரணிநடத்தியபோது ஆழ்ந்த தியானத்துக்குப் போய்விட்டார் ரஜினி.
இதையடுத்து சில தமிழ் சினிமா உலகத்தினர் அவரைப் போய் சந்தித்து தட்டி எழுப்பினர். காவிரிப் பிரச்சனையா...என்றுகொட்டாவி விட்ட ரஜினியால் வெறுத்துப் போன அவர்கள் பாரதிராஜாவைச் சந்திக்க அவர் தனது தலைமையில் போராட்டத்தைஆரம்பித்துள்ளார்.
இப்போது இந்தப் போராட்டத்தை கெடுப்பதில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ரஜினி. முதலில் போராட்டம் வேண்டாம்என்று அறிக்கை விட்டு தமிழ் மண்ணே என்று உணர்ச்சிவசப்பட்டு ஆக்டிங் தந்தார்.
அவருக்கு எதிராக தியேட்டர்களும் சேர்ந்து கொள்ள தனது படத்தை இனி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது கூட கஷ்டமாகிவிடும்என்ற பிசினஸ் கவலை காரணமாக நேற்று முன்தினம் இரவு நடிகர் சங்கத்துக்கு ஓடி வந்தார். வந்தவர் மீண்டும் தனது பழையபல்லவியைப் பாடி அங்கிருந்தவர்களின் மனதை மாற்ற முயன்றார்.
நெய்வேலி வேண்டாம்..
போராடத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம், நெய்வேலியில் நடத்தி கர்நாடகத்துக்கு மின்சாரம் தடை செய்ய வேண்டும்என்றெல்லாம் போராட வேண்டாம் என்று அவர் கூற உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்க சக நடிகர்களுக்கும் ரஜினிக்கும்வாக்குவாதமே உண்டாகிவிட்டது. இதையடுத்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே கிளம்பினார் ரஜினி.
அவரிடம் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஆதரிப்பீர்களா இல்லையா என்று சரத்குமார் கேட்க, ஆதரிக்கிறேன் என்றுஅரைகுறையாக சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து நேற்று திடீரென டெல்லி போகிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறிவிட்டு விமானம்ஏறினார் ரஜினி. இவர் பிரதமரைத் தான் சந்திக்கப் போவதாக நிருபர்கள் நினைக்க, டெல்லியில் இறங்கிய ரஜினி அங்கிருந்தநிருபர்களிடம் ரிஷிகேஷ் போகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த பிளைட் ஏற தமிழக நிருபர்களுக்கு குழப்பமோ குழப்பம்.
ரத்தம் கேட்டதா தமிழகம்?
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் காவிரியில் நீர் கேட்டு நடிகர்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன்,கர்நாடகத்தில் இருந்து ரத்த ஆறு கேட்க மாட்டேன் என்று அடுத்த படத்துக்கான வசனத்தை பேசிவிட்டுப் போனார்.
இதன்மூலம் வழக்கம்போல் அனைவரையும் குழப்பும் வேலையை அவர் தொடங்கிவிட்டது தெளிவாகிறது.
தமிழகத்தில் யாரும் கர்நாடத்திடம் ரத்தம் கேட்கவில்லை.. தமிழக விவசாயிகள் கேட்பது உயிர்ப் பிச்சை. தனது பயிர்களுக்கும்குடும்பத்துக்கும் வாழ்வு தரும்படி தான் கேட்கிறது தமிழகம். யாரும் கன்னடர்களின் அல்லது அந்த இனத்தைச் சேர்ந்த ரஜினியின்ரத்தத்தைக் கேட்கவில்லை.
பிரதமரை சந்திப்பது என்பது திட்டமிட்டு செய்ய வேண்டிய செயல். பிரதமர் வாஜ்பாய் இந்த வாரம் முழுவதுமே சைப்ரஸ்,இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருப்பார். இதற்காக இன்று டெல்லியில் இருந்து கிளம்பிவிட்டார்வாஜ்பாய். இதை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு டெல்லி போய் பிரதமரை சந்திக்கிறேன் என்று நேற்று கிளம்பினார் ரஜினி.
ஆனால், பிரதமர் அலுவலகததில் கேட்டபோது அவருக்கு பிரதமரை சந்திக்க இந்த வாரம் நேரம் ஒதுக்கப்படவே இல்லைஎன்றனர்.
இதனால், இந்த வாரம் முழுவதுமே பிரதமரை சந்திக்க முடியாது என்பது ரஜினிக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், பிரதமரைசந்தித்துவிட்டுத் தான் வருவேன் என்று சாக்கு சொல்லி ரிஷிகேசிலேயே அடுத்த 12ம் தேதி வரை இருந்து விட்டு தமிழகதிரையுலகம் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்காமல் தப்பிவிட ரஜினி திட்டம் போட்டுள்ளார் என்று தெரிகிறது.
வாய் திறப்பாரா கெய்க்வாட்:
தமிழகத்தில் உள்ளவர்கள் அவர் பிரதமரை சந்திக்கப் போய் இருப்பதாகவும் பிரதமர் ஊரில் இல்லாததால் ரிஷிகேஷ் போய்இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் போராட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் நினைக்க வேண்டுமாம்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கும், தமிழகத்துக்கும் எதிராக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தனது பாத யாத்திரையைஆரம்பித்துள்ளார்.
முதலில் நான் ஒரு இந்தியன் என்று கூறிய ரஜினி, ஒரு இந்தியர் என்ற வகையில் தமிழகத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்குஎதிராக ஒரு வார்த்தை பேசலாமே..
பேசுவாரா இந்த சிவாஜி ராவ் கெய்க்வாட்?
தீர்வு கிடைக்கும்: வாஜ்பாய்
இதற்கிடையே சைப்ரஸ் புறப்படும் முன் டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய், காவிரிவிவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் முன் உள்ளது. இந்த விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
காவிரி நீதிமன்றத்தையே மதிக்க மறுத்து வருகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications