12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. "கட்"
சென்னை:
தமிழ் திரையுலகினரின் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு வரும் 12ம் தேதிதமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. சேனல்கள் இயங்காது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
வரும் 12ம் தேதி நெய்வேலியில் தமிழ் திரையுலகினர் மாபெரும் பேரணிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடாத கர்நாடகத்துக்கு நெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என்றுகோரி அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
திரையுலகினரின் இந்தப் போராட்டத்திற்கு தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்களுடைய முழுமையானஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்த ஆபரேட்டர்கள் முடிவுசெய்துள்ளனர்.
கர்நாடகத்தில் தமிழக கேபிள் டி.வி. சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாகதமிழகத்திலும் கன்னட கேபிள் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
கருப்பு சட்டை அணிய வணிகர்கள் முடிவு:
இதற்கிடையே காவிரிப் பிரச்சினையில் திரையுலகினர் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவாக வரும் 12ம்தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகர்கள் கருப்பு பேட்ஜ், சட்டை, அணிந்து கொண்டு பணியாற்றுவர் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், கலையுலகினர் ஒன்று திரண்டுபோராட்டம் நடத்தும்போது அதை ஆதரிக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனப்பூர்வமாக வரவேற்கிறது. திரைப்படத்துறையினரை ஊக்குவிக்க வேண்டிய கடமை லட்சோப லட்சம் வணிகர்களின் கடமையாகும்.
இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 12ம் தேதி முழுஅடைப்பு நடத்துவது என்று வணிகர் பேரவை முடிவு செய்துள்ளது.
மேலும், அன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகர்கள் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ்ஆகியவை அணிந்து போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அதுதவிர, நெய்வேலி செல்லும் பாதை நெடுகிலும் உள்ள கடைகளில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டுகலையுலகினருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications