திமுகவுக்கு தி.க. நன்றி
சென்னை:
காவிரியில் நீர் கேட்டு தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள முழு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தந்த திமுகவுக்குதிராவிடர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தாலும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுகவின்முடிவை வரவேற்கிறேன். முக்கிய எதிர்க் கட்சியான திமுகவின் ஆதரவு இல்லாமல் இது போன்ற போராட்டங்களை வெற்றிகரமாகநடத்திவிட முடியாது.
எதிர் காலத்திலாவது மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக நடக்கும் கூட்டங்களை திமுக புறக்கணிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி விவகாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள ஒற்றுமையை நாம் எக் காரணம் கொண்டும் கைவிடக் கூடாது.
தமிழக வளர்ச்சிக்காக மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களும், தமிழக எம்.பிக்களும் இணைந்து செயல்பட ஆரம்பிக்கவேண்டும்.
தமிழக மக்களுக்காக திரையுகலம் காட்டும் தீவிரம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று வீரமணி கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு சமூக நீதி கட்சி கண்டனம்:
இந் நிலையில் காவிரிக்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் தமிழர் நலனை திமுகபுறக்கணித்துவிட்டது என சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் கூறியுள்ளார்.
பந்த் அல்ல, வேலை நிறுத்தம்:
இந் நிலையில் நாளை நடக்கவுள்ள போராட்டத்துக்கு பந்த் என்று பெயரிடப்படவில்லை. அரசு சார்பில் பந்த் இச்ச நீதிமன்றம்தடை விதித்துள்ளது. இதனால் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நாள் வேலை நிறுத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டு இந்த பெயரிடப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications