நெய்வேலியில் பாரதிராஜா: போராட்டம் நடத்த 3 இடங்கள் தேர்வு
நெய்வேலி:
நெய்வேலியை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டஅதிகாரிகளுடன் இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான திரையுலகக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்தியது.
நெய்வேலியில் தமிழக திரையுலகினர் சார்பில் கர்நாடகத்தைக் கண்டிக்கும் போராட்டம் 12ம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கவும், போராட்ட முறை குறித்து முடிவு செய்யவும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில்12 பேர் அடங்கிய குழுவினர் நெய்வேலி சென்றனர்.
இக்குழுவினர் இன்று நெய்வேலியில் மாவட்டஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜீவ் குமார்ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.
இதில் நெய்வேலி மின் நிலையத்தின் தலைமை அலுவலகம், இந்திரா நகர், மின் நிலையத்தின் 2வது பிரிவின் வாயில் ஆகியஇடங்களில் ஒன்றில் போராட்டம் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பான இடமாகவும் அதே நேரம் நெரிசல் ஏதும் ஏற்பட்டு அசம்பாவிதம்நடந்துவிடாமல் இருக்கவும் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
இன்று சென்னை திரும்பும் பாரதிராஜா போராட்டம் தொடர்பான விரிவான விவரங்களை இன்று இரவு அறிவிக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications