பெங்களூர் வரை மட்டுமே செல்லும் தமிழக ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலிருந்து மைசூர் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவை பெங்களூர் வரைசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அக்டோபர்10ம் தேதி வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் அனைத்தும் பெங்களூர் வரை மட்டுமே செல்லும் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:
தஞ்சாவூர்-மைசூர் எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் ஜன சதாப்திஎக்ஸ்பிரஸ், மைசூர்-திருப்பதி விரைவுப் பயணிகள் ரயில்.












Click it and Unblock the Notifications