அமைதியாக நடந்து முடிந்த காவிரி பந்த்
சென்னை:
தமிழகத்தில் அனைத்துக் கட்சியினர் இன்று அழைப்பு விடுத்த பந்த் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த பந்த் முழுவெற்றி அடைந்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து இந்த பந்த் நடந்தது. இன்று காலை 6மணிக்கு தொடங்கிய இந்த பந்த் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
சாலைகளில் வாகனங்கள் எதுவும் ஓடாததால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளும் இன்றுபாலைவனம் போல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அரசு பஸ்களும் கூட நிறுத்தப்பட்டு விட்டதால் மாலை 6 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லை.ஓரிரண்டு தனியார் வாகனங்களும் டூ வீலர்களும் மட்டுமே ஆங்காங்கு ஓடிக் கொண்டிருந்தன.
ஆனால் மாலை 6 மணிக்கு மேல் படிப்படியாக வாகனங்களும் அரசு பஸ்களும் ஓட ஆரம்பித்தன.
நீண்ட தூர ரயில்களும் கூட ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் இன்று காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதனால் ரயில் நிலையங்களிலே ஏராளமான பயணிகள் ரயிலை விட்டு இறங்கி காத்துக் கொண்டிருந்தனர். பின்னர்மாலை 6 மணிக்கு மேல் ரயில்களில் மீண்டும் ஏறி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பந்த் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்வழக்கமாகப் புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் தடையில்லாமல் புறப்பட்டுச் சென்றன. சென்னைவந்து சேர வேண்டிய விமானங்களும் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வந்து சேர்ந்தன.
மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், அரசு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள்,ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மாலை 6 மணிக்கு மேல் சில கடைகளும் ஹோட்டல்களும்திறக்கப்பட்டன. தியேட்டர்களிலும் மாலைக் காட்சிகளுக்காக திறக்கப்பட்டன.
பந்த்தின் போது வங்கிகள் மற்றும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், ஊழியர்கள்வேலைக்கு வரவில்லை.
குடிநீர், பால், மின்சாரம், தொலைத் தொடர்பு போன்ற அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இன்றைய பந்த்தின்போது பாதிக்கப்படவில்லை. அதுபோலவே மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவையும் இன்றுவழக்கம் போல் இயங்கின.
பந்த்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் பல இடங்களில் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகியோரின் கொடும்பாவிகள்எரிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றுமாநில டி.ஜி.பி. நெயில்வால் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் முழு ஆதரவு:
இதற்கிடையே மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பந்துக்கு முழு ஆதரவு கிடைத்தது.
தென் மவாட்டங்களிலும் இந்த பந்த்தினால் இயல்பு வாழ்க்கை மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள், தியேட்டர்கள்அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சாலைகள் காலியாகக் கிடந்தன. மதுரை மாநகரம் முழுவதுமாகவே ஸ்தம்பித்துப் போனது. மாலை 6 மணிக்கு மேல் தான் இயல்பு நிலை மீண்டும்திரும்பியது.
வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் யாரும் வரவில்லை.
கோவை, திருப்பூரில் ஜவுளி ஆலைகள் மூடல்:
இந்நிலையில் இன்று நடந்த பந்த் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த மாவட்டங்களில் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் முழு அளவில் இயங்கவில்லை. ஊரகப் பகுதிகளில் ரோட்டோர டீ கடைகள் மட்டும்திறந்திருந்தன. மாலை 6 மணிக்கு மேல் மற்ற கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஜவுளி ஆலைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கவில்லை.
பாண்டிச்சேரியிலும் பந்த்:
இதற்கிடையே அண்டை மாநிலமான பாண்டிச்சேரியிலும் இன்று 12 மணி நேர பந்த் அமைதியாக முடிவடைந்தது.
காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்திபாண்டிச்சேரியிலும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அங்கும் வாகனப் போக்குவரத்து முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள்,கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளும்கூட மூடப்பட்டிருந்தன.
மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவமும்நிகழாமல் பாண்டிச்சேரியிலும் பந்த் அமைதியாக முடிவடைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications