உயர் நீதிமன்றம் செயல்படுகிறது: பணிகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று தமிழகத்தில் பந்த் நடந்து கொண்டிருந்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கம் போல் செயல்படும்என்று அதன் பதிவாளர் கே. ஜெயராமன் கூறினார்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் இந்த பந்த்திற்கு ஆதரவாகஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே போல், சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர். காந்தியும் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவெளியிட்டுள்ளார்.
இருந்த போதிலும் நீதிமன்றம் இன்று செயல்படும் என்று உயர்நீதிமன்றப் பதிவாளர் கூறினார்.
ஆனால், பஸ்கள், ரயில்கள் இல்லாததால் மக்கள் யாரும் நீதிமன்றம் வரவில்லை. பெரும்பாலானவழக்கறிஞர்களும் நீதிமன்றம் வரவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications