போராட்டத்தை ரஜினி புறக்கணிப்பது ஏன்?
சென்னை:
தன்னை மிகக் கடுமையாக எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையான நெய்வேலியில் தலையைக் காட்டினால்தனக்கு எதிராக கோஷம் போட்டு கேவலப்படுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலும், தன்னை தீவிரமாக விமர்சித்து வரும்பாரதிராஜா தலைமையில் நடக்கும் போராட்டம் என்பதாலும் தான் ரஜினி நெய்வேலி போராட்டத்தை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளார்.
முதலில் கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதை ரஜினி விரும்பவில்லை. இதற்கு அவர் கூறும் காரணம், இதனால்கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சனை உருவாகலாம் என்பது.
ஆனால், அவர் கன்னட இன உணர்வு காரணமாகவே போராட்டத்தை எதிர்ப்பதாக பாரதிராஜா உள்ளிட்டவர்கள் மறைமுகமாகக்குறிப்பிடுன்றனர்.
அதே நேரத்தில் நெய்வேலியை உள்ளடக்கிய கடலூர் மாவட்டம் வன்னியர்கள் நிறைந்த பகுதி. இது பா.ம.கவின் கோட்டை.இங்கு பல ரஜினி மன்றங்களை கலைக்கச் செய்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். ரஜினி மன்ற நிர்வாகிகள் பலரும் பா.ம.கவுக்குப்போய்விட்டனர்.
தமிழ் திரையுலகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட உடன் முதலில் ஆதரித்தது ராமதாஸ் தான். அந்தப் போராட்டத்தில்பா.ம.கவினரும் கலந்து கொள்வர் என்று அறிவித்தார்.
இதனால் அப்போதே ரஜின் கலந்து கொள்வது சந்தேகத்திற்கிடமாகிவிட்டது.
தன்னை எதிர்த்து பா.ம.கவினர் நிச்சயம் கோஷம் போடுவார்கள் என்பதை ரஜினி உணர்ந்துள்ளதால் நெய்வேலி வேண்டாம்சென்னையில் போராடலாம் என்று அவர் கூறியதாகவும் ஆனால், அதை திரையுலகினர் நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.
இந்தப் போராடத்தை தவிர்க்க ரஜினி எடுத்த முடிவுக்கு அடுத்த முக்கிய காரணம் பாரதிராஜா என்கின்றனர் அவரது ரசிகர் மன்றநிர்வாகிகள். ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் பாரதிராஜா தலைமையிலான போராட்டம் என்பதால் தான் அதில்பங்கேற்க வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்துவிட்டதாக மன்றத்தினர் கூறுகின்றனர்.
மொத்தத்தில் கர்நாடகத்துக்கு எதிராக போராட்டத்தில் ரஜினி பங்கேற்கமாட்டார் என்பது மட்டும் மிகத் தெளிவாகிவிட்டது.
இதனால் அவருக்கு எதிராக திரையுலகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications