நிறைந்து வழிந்த ரயில் நிலையங்கள்
சென்னை:
பந்த்தையொட்டி காலை 6 மணிக்கு தமிழகத்துக்குள் ஓடிக் கொண்டிருந்த பல ரயில்களும் ஆங்காங்கே உள்ள ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் நிறைந்து வழிந்தன.
ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்களை விட்டு இறங்கி ரயில் நிலையத்துக்குள்ளேயே சுற்றி வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் ரயில் நிலையங்களில் உணவுப் பண்டங்களில் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.
குழந்தைகளை வைத்துள்ள பயணிகள், கையில் போதிய பணம் இல்லாத பயணிகள் தான் மிகவும் சிரமப்பட்டனர்.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள்:
தமிழகத்தில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்கள் விவரம் (அடைப்புக் குறிக்குள் நிறுத்தப்பட்டுள்ளஇடங்கள்):
பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (திண்டுக்கல்), நாகூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (செங்கல்பட்டு),ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்), திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்),லக்னோ-சென்னை எக்ஸ்பிரஸ் (சூலூர்பேட்டை),
வாரணாசி-சென்னை எக்ஸ்பிரஸ் (நாயுடுபேட்டை), பொகாரோ ஸ்டீல் சிட்டி-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (காட்பாடி),திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (திருப்பதி), தாம்பரம்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் (திருவாரூர்),
தூத்துக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் (தாம்பரம்), ஹைதராபாத்-சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் (கும்மிடிப்பூண்டி),மும்பை லோக்மான்யா திலக் டெர்மினஸ்-மதுரை எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்), சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்(திருநெல்வேலி), சென்னை-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (மதுரை), சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(திருநெல்வேலி).
இந்த ரயில்கள் இன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
இவை தவிர பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அவற்றின் விவரம்:
சென்னை சென்ட்ரலிலிருந்து கிளம்பி மீண்டும் வரும் மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ்,பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்,
பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூர் பாசஞ்சர் ரயில்உள்ளிட்ட ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
இவை தவிர சென்னை எழும்பூரிலிருந்து இயங்கும் வைகை, பல்லவன், மதுரை சிறப்பு ரயில், தாம்பரத்திலிருந்துஇயங்கும் சோழன் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ஆகியவை உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
மொத்தம் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications