வங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னையில் கன மழை
சென்னை:
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.காவிரி டெல்டா பகுதிகளிலும் அடுத்த ஒருசில நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக தமிழகத்தை வெயில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அக்டோபர்மாதத்திலாவது வடகிழக்குப் பருவமழை பெய்து வெப்பம் தணியும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று இரவிலிருந்தே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாகவே சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் சென்னையின் பல தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையைச் சுற்றியுள்ளஏரிகளிலும் ஓரளவு நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சென்னைக்குக் கிழக்கே வங்கக் கடலில் தோன்றியுள்ள இந்தப் புயல் சின்னம் படிப்படியாகத்தென்மேற்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், காவிரி டெல்டாப் பகுதிகளிலும் அடுத்த சிலநாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தெரிகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்துவிட மறுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டாவிவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே குறுவை சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் தற்போது சம்பா பயிர்களும் கறுகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக மழை பெய்தால் மட்டுமே காவிரி டெல்டாபகுதிகளில் உள்ள சம்பா பயிர்கள் தப்பிப் பிழைக்கும் என்று தெரிகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள்இந்த மழையை வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications