பெங்களூரில் தமிழக வாலிபர் கொலையா?
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை போலீசார்மறுத்துள்ளனர்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த அப்துல் கரீம் என்ற வாலிபர் பெங்களூரில் பணியாற்றி வந்தார்.
(இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்ததாகக் கூறினர். ஆனால், கூலித் தொழிலாளி என்றுவிசாரணையில் தெரிந்தது).
கடந்த 6ம் தேதி மாலை சிவாஜிநகர் பகுதியில் ஒரு எஸ்.டி.டி. பூத்துக்குச் சென்று போன் மூலம் திருச்சியில் இருக்கும் தனதுதந்தையுடன் தமிழில் பேசியதாகவும் அதை வெளியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கும்பல் அவர் வெளியே வந்தவுடன்இழுத்துச் சென்றதாகவும்,
பின்னர் அடித்துத் துன்புறுத்தி, கொலை செய்து ரோட்டில் வீசியதாகவும் அந்த உடல் பெளரிங் மருத்துவமனையில் போலீசாரால்சேர்க்கப்பட்டதாகவும் இவரது உறவினர்கள் திருச்சியில் தெரிவித்தனர்.
ஆனால், இந்தச் செய்தியை பெங்களூர் போலீசார் மறுத்தனர். இது மிகத் தவறான செய்தி என்றும் ஒரு மனநலம் குன்றிய நபர் கரீம்மீது கல்லைத் தூக்கிப் போட்டபோது அவர் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மக்களிடையே புரளியைக் கிளப்பி அமைதியைக் குலைக்க முயலும் சமூக விரோதிகள் தான் இது கொலை என்பது போன்றபோன்ற புரளிகளைக் கிளப்புவதாகக் கூறினர்.
இந்தச் சம்பவத்துக்கும் காவிரி விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இப்போது இச் சம்பவம் நடந்ததால் அதைகாவிரி விவகாரத்துடன் தொடர்புபடுத்த முயற்சி நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து நாம் விசாரித்தபோது, ஜீவன்பீமா நகர் காவல் நிலைய எல்லையில் இச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.அந்தோணிராஜ் என்ற இவரது சக ஊழியருக்கும் அப்துல் கரீமுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதில் இவரை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தலையில் கல்லைப் போட்டு அந்தோணிராஜ் நசுக்கியதாகவும் தெரிய வந்தது.
இது காவிரி தொடர்பான கொலையாகத் தெரியவில்லை. மேலும் சிவாஜி நகரில் வசிப்பவர்கள் 90 சதவீதத்தினர் தமிழர்களும்முஸ்லீம்களும் தான். இங்கு கன்னட வெறியர்கள் வாலாட்டிய வரலாறே இல்லை. 1991ம் ஆண்டில் காவிரிக் கலவரம் நடந்து பலதமிழர்கள் கொல்லப்பட்டபோது கூட இந்தப் பகுதியில் ஒரு தமிழர் கூட தாக்கப்படவில்லை. அவர்களுக்கு முஸ்லீம்கள் முழுப்பாதுகாப்புத் தந்தனர்.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவரை அதிலும் முஸ்லீமை சிவாஜி நகரில் வைத்து கன்னட வெறியர்கள் தாக்குவது என்பதுதிரிக்கப்பட்ட செய்தியாகத் தான் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications