கருணாநிதி-ரஜினி கூட்டணியில் இருந்து விலகிய விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி போராட்டம் கண்டிப்பாகவும், அமோகமாகவும் நடைபெறும் என்று நடிகர் விஜயகாந்த்திட்டவட்டமாகக் கூறி விட்டதால் ரஜினியின் கடைசிக் கட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரைவிட அதிகம் ஏமாந்துள்ளது திமுகதான்.

திரையுலகினரின் போராட்டத்தில் ஆரம்பம் முதலே பட்டும் படாமலும் இருந்து வருகிறது திமுக. காரணம்,அதிமுகவை பாரதிராஜா ஆதரிப்பதாக திமுக கருதுகிறது. இதையடுத்து திமுக நடிகர்களிடம் விஜயகாந்த் வரும்வரை அடக்கியே வாசிக்குமாறு திமுக தலைமை கேட்டுக் கொண்டது.

விஜயகாந்த் வந்தவுடன் எப்படியாவது போராட்டத்தை உடைத்து, நடிகர் சங்கத்தை தனியாக போராட்டம் நடத்தவைத்து, அதற்கு ஆதரவு கொடுத்து திமுக பின்னணியுடன் நடக்கும் போராட்டம் என்பது போல காட்ட முயற்சிநடந்தது.

இதன் மூலம் பாரதிராஜாவின் போராட்டத்தை குலைய வைக்கவும் திமுக திட்டமிட்டது.

இதை அடிப்படையாக வைத்தே, ரஜினிக்கு முதன் முதலில் திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு கொடுத்தார்.பாரதிராஜா போராட்டத்தை கிண்டலடித்தார். "கரண்ட் மறியலா, எப்படி செய்யப் போகிறார்கள், கரண்ட்டை மறிக்கமுடியாதே" என்று நக்கலும் செய்தார்.

இந்த நிலையில் ரஜினி நெய்வேலிப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறியவுடன், திமுகவும்உடனடியாக ஒரு அறிக்கை விட்டது. நெய்வேலியில் வன்முறை ஏற்பட்டு விடும் என்று கருதப்படுவதால் திமுகநடிகர்கள் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறி விட்டார் கருணாநிதி.

விஜயகாந்த்தையும் இழுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. ஆனால், அவரை அதிமுக தலைமை பேசி சரிசெய்துவிட்டது.

இதனால் மாலை வரை ஒரு தெளிவான முடிவுக்கு வராத விஜய்காந்த் பின்னர் திட்டவட்டமாக ஒரு முடிவுக்குவந்தார். தனியே போராட்டம் நடத்தும் ரஜினிக்கு எதிராக காட்டமான அறிக்கை விட்டார்.

திமுகவை மிஞ்சும் வகையில் விஜயகாந்த் அடித்த இந்த ஸ்டண்ட் கலைஞரையே திணறிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+