தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்கு ரஜினி முயல்கிறார்: கர்நாடக முதல்வர்
சென்னபட்டணா:
தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவி வரும் பதற்றம் குறையும் என கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்துக்கு எதிரான தனது பாத யாத்திரையை 4வது நாளாக அவர் இன்றும்தொடர்ந்தார்.
நெய்வேலி போராட்டத்தை தவிர்த்துவிட்டு தமிழர்- கன்னடர் நல்லுறவுக்காக முயற்சி செய்யும் ரஜினிக்கு அவர் தனதுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
நேற்றிரவு சென்னபட்டணாவில் தங்கிய அவர் இன்று காலை மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அவருடன் ஆயிரக்கணக்கானகாங்கிரஸ்காரர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
யாத்திரையின் இடையே நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் ஏற்கனவே சொன்னேன். இயற்கையால் மட்டும் தான் இந்த விவகாரத்தைத் தீர்க்க முடியும் என்றேன். இப்போதுதமிழகத்திலும் காவிரி டெல்டா பகுதியிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்துள்ளது.
செயற்கைக் கோள் படத்தையும் பார்த்தேன். அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என்கிறார்கள். இந்த நேரத்தில் இதைவிடமகிழ்ச்சியாக விஷயம் வேறென்ன இருக்க முடியும்?. தமிழகத்தில் மிக நல்ல பெய்வதாக செய்திகள் வருவது மிகுந்த மகிழ்ச்சிதருகிறது.
ரஜினியைப் பொறுத்தவரை தமிழர்- கன்னடர் நல்லுறவு சிதைந்துவிடக் கூடாது என்று போராடுகிறார். அவருக்கு எனகுவாழ்த்துக்கள். அவரும் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் விட வேண்டும் என்று தான் கேட்கிறார். அவருக்கு இயற்கையே (மழை)நீர் தர ஆரம்பித்துவிட்டது.
அவரது உண்ணாவிரதத்தை இயற்கையே மதித்து நீர் தந்துவிட்டது. தமிழகத்துக்கு இன்னும் நல்ல மழை கிடைக்க நான்பிரார்த்திக்கிறேன் என்றார் கிருஷ்ணா.
இன்று மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் தொகுதி வரை கிருஷ்ணா நடப்பார். இந்தத் தொகுதியில் தான் அவர் கடந்ததேர்தலில் வென்றார். எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தனது யாத்திரையை 12ம் தேதி கிருஷ்ணா முடித்துக் கொள்கிறார்.
அன்றைய தினமே அவர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுக்கு காரில் செல்வார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கிருஷ்ணாஉரையாற்றுகிறார். அதில் நடிகர் ராஜ்குமாரும் பங்கேற்க உள்ளார். பாதயாத்திரையின் கடைசி கட்டத்தில் ராஜ்குமாரும்பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
ராஜ்குமாரினால் தான் தமிழகத்தில் அவரது நண்பர் ரஜினிக்கு மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அவர் நடத்திய தமிழகஎதிர்ப்புப் பேரணியால் தான் ரஜினி இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க வேண்டி உள்ளது.
இதனால் அவரை இந்தப் போராட்டத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications