நெய்வேலி போராட்டம்: நேற்று நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி

நெய்வேலி போராட்டம் தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மேற்கொண்ட பலநடவடிக்கைகள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

போராட்டம் கண்டிப்பாக நடக்கும் என்று அவர் கூறிய பின்னர் தான் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஒரு டைம்-லைன் தொகுப்பு:

காலை 6 மணி: விமான நிலையத்தில் விஜயகாந்த்: நெய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளமாட்டார். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டமாக இருந்தால் அவர் கலந்து கொள்வார்.

பிற்பகல் 12 மணி: செய்தியாளர்களிடம் ரஜினி: என்னை யாரும் மிரட்ட முடியாது. யாருக்கும் நான் பயப்படமாட்டேன். என்னைக் கலந்து ஆலோசிக்காமல் நெய்வேலி போராட்டத்திற்கு முடிவு செய்துள்ளார்கள். 12ம் தேதிநான் தனியாக உண்ணாவிரதம் இருப்பேன்.

பிற்பகல் 1 மணி: திக தலைவர் கருணாநதி அறிக்கை: திமுக நடிகர்கள் நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

மாலை 3 மணி: விஜயகாந்த் பேட்டி: நடிகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முடிவு. முதல்வரைச் சந்திக்க உள்ளேன்

இரவு 7 மணி: விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு: நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி, மிகவும் சிறப்பாகநிடைபெறும், இதை யாரும் தடுக்க முடியாது. ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருந்தால் இருக்கட்டும். அவர்எப்பவும் தனியாகத்தான் இருப்பார். அவர் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் கிடைத்து விடுமா?

வைரமுத்து ஆலோசனை:

இரவு 7 மணி வரை நடிகர் சங்கம் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்றுதான் அத்தனை பேரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். லண்டனில் இருந்து சென்னை வந்து சேர்ந்தவுடன் விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு சென்றுநடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, சந்திரசேகர் போன்றோருடன் ஆலோசனை நடத்தினார். இதில்கவிஞர் வைரத்துவும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

இந்த ஆலோசனையின்போது நடிகர் ரஜினியின் திடீர் அறிவிப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்திற்கு முன்பே ரஜினியும், விஜயகாந்த்தும் போனில் பேசி விட்டதாகவும், அதன்படி நடிகர் சங்கம் சார்பில்தனியாக சென்னையில் போராட்டம் நடத்தலாம் என ரஜினி ஆலோசனை வழங்கியதாகவும், இதுகுறித்தேநடிகர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நெய்வேலி பாதுகாப்பு குறித்து நடிகர்கள் அச்சம் தெரிவிப்பதாக விஜயகாந்த் செய்தியாளர்களிடம்கூறினார்.

ரஜினிக்கு கமல் எதிர்ப்பு:

ரஜினியின் தனி போராட்ட முடிவுக்கு கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஏற்கனவே ஒரு போராட்டம் முடிவாகி முதல்வரிடம் நேரில் சந்தித்து அனுமதி வாங்கியபிறகு தனியாக போராட்டம்என்றால் மக்கள் மத்தியில் நாம் கேலிக்குரியவர்களாகி விடுவோம். எனவே புதுப் போராட்டம் அவசியமா என்றுஇவர்கள் விஜயகாந்த்தைக் கேட்டுள்ளனர்.

விஜய்காந்துக்கு நோஸ்-கட்:

மேலும், இந்தக் குழப்பம் தொடர்பாக முதல்வரைச் சந்திக்கவும் விஜயகாந்த் முயன்றுள்ளார். ஆனால் விஜய்காந்த்ரஜினியுடன் கூட்டு சேரும்பட்சத்தில் அவரைச் சந்திக்க ஜெயலலிதா தயாராக இல்லை போயஸ் கார்டனில் இருந்துபதில் வந்தது.

இதையடுத்து மீண்டும் நடிகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த முறை பாரதிராஜாவுடனும் பேசினார்.திரைப்பட வர்த்தக சபையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம்கலந்து கொள்வது என்று முடிவானது.

அதன் பிறகுதான் பாரதிராஜாவின் முகத்தில் நிம்மதியைக் காண முடிந்தது.

இதன்மூலம் மீண்டும் ரஜினி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய அடுத்த நடவடிக்கை என்ன என்றுதெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+