பாகிஸ்தானில் இன்று தேர்தல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று கோமாளித் தேர்தல் நடக்கிறது.
ஜனாதிபதி, படைகளின் தலைவர் ஆகிய பதவிகளையும் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், தேர்தல் கமிஷன் ஆகியவற்றின்கட்டுப்பாட்டையும் தனது கையில் எடுத்துக் கொண்டுள்ள பர்வேஸ் முஷாரப் இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
இந்தத் தேர்தலே ஒரு கேலிக் கூத்து என இந்தியாவும் சர்வதே மனித உரிமை அமைப்பும் கூறியுள்ளன.
3 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியைக் கவிழ்த்த முஷாரபுக்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கூடிக் கொண்டே வருகிறது. இதையடுத்து வேறுவழியில்லாமல் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
ஆனால், பாகிஸ்தானின் இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களான நவாஸ் ஷெரீப், பெனசீர் புட்டோ ஆகியோரை தேர்தலில்போட்டியிட விடாமல் தடுத்துவிட்டு இந்தத் தேர்தலை நடத்துகிறார் முஷாரப்.
மொத்தம் 272 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7.2 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ளது.காலை 8.30க்கு தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 5.30 மணிக்கு முடிவடையும்.
இன்று இரவே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைமுஷாரபே முடிவு செய்துவிட்டதாகவும் அதற்கேற்ப ராணுவத்தின் உதவியுடன் வாக்குகள் குத்தி பெட்டிகளில் போடப்படும்என்றும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
இதனால் இந்தத் தேர்தலே முழுக்க முழுக்க மோசடியானது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
பொனாசீர் போட்டியிடாவிட்டாலும் அவரது கட்சி போட்டியிடுகிறது.
முஷாரபால் உருவாக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் குவாத் கட்சியை வெற்றி பெறச் செய்ய ராணுவம் முழு அளவில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெனாசீர் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications