விரக்தியின் விளிம்பில் ரஜினி
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் விரக்தியின் விளிம்புக்கே வந்து விட்டார் என்பதை அவரது பேட்டி வெளிப்படுத்தியுள்ளது.
"பாபா" படத்தின் துவக்கத்திலிருந்து ரஜினிக்கு சரிவு ஆரம்பமாகி விட்டது. அதன் படப்பிடிப்பின் போதே பலதடங்கல்கள் ஏற்பட்டன. கையில் காயம் ஏற்பட்டது. ஷூட்டிங் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் போதும் பல சிக்கல்கள். பாமகவினரால் பெரும் பாதிப்பை சந்தித்தது "பாபா".படமும் சரியாக இல்லாததால் மக்களையும் கவரவில்லை.
உச்சகட்டமாக "பாபா" படத்தை எடுக்க ஆலோசனை கூறிய ரஜினியின் குருவான அமெரிக்க சாமியார் சச்சிதானந்தசுவாமிகள் சென்னைக்கு வந்திருந்த போது மரணமடைந்தார்.
இந்த நிலையில் "வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது" போல காவிரிப் பிரச்சினை வந்தது. அதற்குக் காரணம்,பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் தலைமையில் நடந்த பேரணி.
இதற்கு ரஜினி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எழுந்த கேள்வி, "இயக்குநர் இமயம்" பாரதிராஜாவின்காட்டமான அறிக்கையால் பெரிய பிரச்சனையானது.
பாரதிராஜா கேட்ட கேள்வி, தமிழக மக்கள் அத்தனை பேரின் மனதிலும் புதிய சிந்தனையை தட்டி எழுப்பியது.இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் உணர்வு பொங்கிப் பெருகத் தொடங்கியது.
மக்களின் எழுச்சியைப் பார்த்த ரஜினி இதுகுறித்து யோசித்துச் சொல்வதாக அறிவித்தார். ஆனால் அவர்யோசித்துச் சொல்வதற்கு முன்பே பாரதிராஜா தலைமையில் திரண்ட தமிழ்த் திரையுலகினர் நெய்வேயில் முற்றுகைப்போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இது ரஜினிக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. நெய்வேலியில் நடத்தவுள்ள போராட்டத்தை மறு பரிசீலனைசெய்யுமாறு அவர் அறிக்கை விடவே வந்தது வினை.
பேசாமல் இருந்திருந்தால் கூட இத்தனை எதிர்ப்புகளை சந்தித்திருக்க மாட்டார். தனது ரசிகர்கள் மத்தியிலேயேகடும் அதிருப்தியை ஏற்படுத்தும் அளவுக்கு ரஜினியின் அறிக்கை அமைந்தது. தமிழகத்தில் விரும்பப்பட்டமனிதர்களாலேயே வெறுக்கப்படும் மனிதராக ஒரே நாளில் மாறி விட்டார் ரஜினி.
இந்த நிலையில் பாரதிராஜாவைச் சந்தித்து தனது கருத்துக்களைக் கூறினார். பின்னர் காவிரி விவகாரம் தொடர்பாகபிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கப் போவதாக கூறி விட்டு, நேராக ரிஷிகேஷ் சென்றார்.
இந்த சூழ்நிலையில் சென்னை திரும்பினார் லண்டன் சென்றிருந்த விஜயகாந்த். ரஜினியும் சென்னை திரும்பினார்.வந்தவுடன் அதிரடியாக பேட்டி கொடுத்தார்.
அதில் தெரித்த கோபம், கடுமை ஆகியவை நிருபர்களையே அசர வைத்தது. இந்த அளவுக்கு ரஜினி விரக்தியில்இருப்பார் என்று நிருபர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
பேட்டியின் போது, என் மீது பொறாமை கொண்ட சிலர் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கி விட்டார்கள்.அவர்களுக்கு தேர்தல் வரும் போது பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
"கர்நாடகத்தில் 40 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடித்தால், கொலை செய்தால் நீங்கள் என்னசெய்வீர்கள்? தமிழ், தமிழன் என்று கூறுகிறீர்களே, உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று ஆவேசமாகப்பேசியதை கன்னட வெறியர்கள் கேட்டிருந்தால் நிச்சயம் பெரும் வன்முறையில் இறங்கியிருப்பார்கள்.
நல்ல வேளையாக தமிழ் டி.வி. சேனல்கள் அங்கு தடை செய்யப்பட்டிருப்பதால் கர்நாடகத் தமிழர்கள்தப்பித்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கடுமையாகப் பேசினார் ரஜினி.
அதேபோல, "தமிழகத்தில் என்னைக் கன்னடத்துக்காரன் என்கிறார்கள். கர்நாடகா போனால் தமிழன் என்கிறார்கள்.சரி வேண்டாம், நான் மகாராஷ்டிரா தான் என்று அங்கே போனால் நீ மதராஸி என்று விரட்டுகிறார்கள். நான்எங்கேதான் போவது? என்ன விளையாடறீங்களா?" என்று அவர் கோபம் கொப்பளிக்க கேட்டபோது, அவரதுவிரக்தியின் எல்லை தெரிந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications