நெய்வேலிக்கு போக மாட்டேன்: சரத்குமார்
சென்னை:
நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் திமுக நடிகர்கள் பங்கேற்கக் கூடாது என்று கட்சியின் தலைவர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். இதை ஏற்று போராட்டத்தை புறக்கணிக்கப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக சரத்குமார் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் ரஜினியின் வீட்டுக்குச் சென்றுஅவரையும் சந்தித்தார்.
இதன் பின்னர் சரத்குமார் கூறியதாவது:
நெய்வேலி போராட்டம் என்பது தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் அல்ல. பாராதிராஜாதலைமையில் உருவான அமைப்பு நடத்தும் போராட்டம். இதற்கு நாங்கள் ஆதரவு தந்தோம்.
ஆனால், பாரதிராஜாவும் போராட்டக் குழுவினரும் கருணாநிதியை ஏன் சந்திக்கவில்லை? அவரைச் சந்தித்துஆலோசனை நடத்தத் தவறிவிட்ட இவர்களுக்கு திமுக ஆதரவு தராதது தவறில்லை.
அதே போல போராட்டத்தை சென்னையில் நடத்தலாம் என்ற ரஜினியின் யோசனையை ஏன் போராட்டக்குழுவினர் புறக்கணித்தனர்? இதை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால்,போராட்டக் குழுவினர் அதையும் செய்யவில்லை. ரஜினியை எதிரியாகவே சித்தரித்துவிட்டோம்.
இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை வரும் வகையில் நாம் செயல்படக் கூடாது. ஆனால், பிரச்சனைஉருவாகும் என்று தெரிவதால் அந்தப் போராட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை திமுக எப்படி போராட வேண்டும் என்று சொல்கிறதோ, காவிரி விவகாரத்தில் மிகஅழகாக தீர்வு கண்ட தலைவர் கருணாநிதி எப்படி சொல்கிறாரோ அப்படிப் போராடுவேன். டி.ராஜேந்தர்,சந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் அவர் சொல்வது போல கேட்டு களம் இறங்குவோம்.
நெய்வேலிக்கும் போக மாட்டோம், ரஜினியின் உண்ணாவிரதத்திலும் பங்கேற்க மாட்டோம்.
என்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் மூச்சு உள்ளவரை நன்றியுடன் இருந்துபோராடுவேன்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications