தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலைஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு இடங்களில் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள்உருவாகியிருப்பதால் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் 2 நிாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது.
சென்னை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவையில்தான் மிக பலத்த மழை பெய்துள்ளது. அங்குஇயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிலஇடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் பிலாக்குறிச்சியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் மரணமடைந்தார். அவர் மேய்த்துக்கொண்டிருந்த 10 ஆடுகளும் மின்னலுக்குப் பலியாயின.
கர்நாடகம் துரோகம் செய்துவிட்ட நிலையில் இந்த மழையால் தமிழக விவசாயிகளுக்கு விடிவு வந்தால் சரி.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications