தமிழர் ஒற்றுமையை குலைக்கப் பார்க்கிறார் ரஜினி: பாரதிராஜா ஆவேசம்
சென்னை:
திரையுலக கலைஞர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அழிக்கப் பார்க்கிறார்ரஜினி என்று இயக்குனர் பாரதிராஜா மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் ரஜினிக்கு எதிராக பாரதிராஜா நேரடியாக கருத்துத் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கத்தில் விஜயகாந்த்துடன் சேர்ந்து பாரதிராஜா பேட்டியளிக்கையில்,
காவரிப் பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடுதான் என்ன? எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம்தமிழர்களின் ஒற்றுமை உணர்வை அழிக்கப் பார்க்கிறார் அவர்.
திமுக நடிகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் சங்கத்தில் சேரும்போது அவர்களுடையசார்பு என்ன என்று பாராமல்தான் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தமிழக மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இதில் கலைஞர்களுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும்,அரசியல் வேறுபாடும் இருக்கத் தேவையில்லை என்றார் பாரதிராஜா.












Click it and Unblock the Notifications