தேவர் குருபூஜை: ஆயுதங்களுடன் வரத் தடை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர்குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டுவரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினமும், நினைவு தினமும் வரும் 30ம் தேதி குருபூஜை விழாவாகஅனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.
அன்றைய தினம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாகபசும்பொன்னில் கூடி மொட்டை போட்டு, காது குத்தி தேவருக்கு அஞ்சலி செலுத்துவர்.
இந்த ஆண்டு குருபூஜை நிகழ்ச்சியைமுன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகராமநாதபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும்ராமநாதபுரம், மதுரை ஊரகம், மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் இதில்கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு ராமநாதபுரம் கலெக்டர் விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திறந்த வாகனங்களில் யாரும் குருபூஜைக்கு வரக் கூடாது. பசும்பொன் கிராமத்தைச் சுற்றிலும் 17 இடங்களில்சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை யாரும் எடுத்து வரக் கூடாது.
குருபூஜையில் கலந்து கொள்ள விரும்பும் அரசியல் தலைவர்கள் அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பாகவே தங்களதுமனுக்களை கொடுத்து விட வேண்டும்.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகியஇடங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படும்.
மேலும் குருபூஜையையொட்டி வரும் 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மதுக் கடைகள் மூடப்பட வேண்டும்என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
