நெய்வேலி போராட்டம்: பெங்களூரில் பதற்றம்
பெங்களூர்:
கர்நாடகத்திற்கு எதிராக தமிழ் நடிகர்கள் நெய்வேலியில் போராட்டம் நடத்தும் நாளைய தினத்தை கறுப்புதினமாக அனுசரிப்போம். நாளை பெங்களூர் வரும் அனைத்து தமிழக வாகனங்களையும் தடுத்து நிறுத்துவோம்என்று கன்னட ரக்ஷனா வேதிகே என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவரான ஜானகேரெ வெங்கட்ராமய்யா கூறுகையில்,
கர்நாடகத்திற்கு எதிராக தமிழ் நடிகர்கள் போராட்டம் நடத்தும் 12ம் தேதியை நாங்கள் கறுப்பு தினமாகஅனுசரிப்போம்.
நாளை கறுப்பு துணியை அணிந்து கொண்டு மல்லேஸ்வரத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலம் செல்வோம்.
மேலும் ஓசூர் சாலையில் அத்திப்பள்ளி, பழைய மெட்ராஸ் சாலையில் கே.ஆர். புரம் மற்றும் ஊட்டி சாலை ஆகியஇடங்களில் தமிழகத்திலிருந்து வரும் அம்மாநில வாகனங்களைத் தடுத்து நிறுத்துவோம்.
பெங்களூர் நகரில் வைக்கப்பட்டுள்ள திமுக மற்றும் அதிமுக கொடிகளையும் அகற்றுவோம் என்றார் அவர்.
இதனால் நாளை தமிழகத்துக்கும் பெங்களூர், மைசூர் இடையிலான பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலைஎழுந்துள்ளது.
மேலும் நெய்வேலி போராட்டத்தைக் காரணமாக வைத்து தமிழர் பகுதிகளில் கன்னடர்கள் புகுந்து கலாட்டாசெய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் பதற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெய்வேலி போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் கன்னட காவேரி போராட்டக்குழுவினர் ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்தின் முடிவில் தமிழ் நடிகர்களின் படங்களும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளும்எரிக்கப்பட்டன.
ஊர்வலம் சென்ற பகுதிகளான குருபரஹள்ளி, குமார வியாச சர்க்கிள், நீலகண்டப்பா சாலை, ஜே.சி. நகர், காவேரிநகர், கமலா நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications