மதுரை பல்கலை தொலைதூரக் கல்விப் பிரிவுக்கு தனி தேர்வாணையர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்திற்கு தனியாக ஒரு தேர்வாணையாளர்நியமிக்கப்படவுள்ளார்.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்போது நேரடிப் படிப்பு (ரெகுலர்) தொலைதூரப் படிப்பு ஆகிய அனைத்துக்கும்ஒரே தேர்வாணையாளர் மட்டும் தான் உண்டு.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்கும்மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு நிலவரப்படி தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மட்டும் 1.31 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தப்பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

இதனால் ஒரே தேர்வாணையாளரே அனைத்துப் படிப்புகளுக்கும் சேர்ந்து விரைவாகச் செயல்படுவதில் சிரமம்ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்கள் கிடைப்பதிலும் தாமதம்ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் மேற்படிப்புகளைத் தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தொலைதூரப் படிப்புகளுக்கு மட்டும் தனித் தேர்வாணையாளரை நியமிக்க காமராஜர்பல்கலைக்கழகம் திட்டமிட்டது.

அதற்கான ஒப்புதலும் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் கிடைத்துவிட்டதாகவும் விரைவில் தொலைதூரக் கல்விஇயக்ககத்திற்குத் தனியாக ஒரு தேர்வாணையாளர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதன் துணைவேந்தரான டாக்டர்பொன்னுசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 18 துறைகளின் (ஸ்கூல்) கீழ் 74 உபதுறைகளைக் (டிபார்ட்மெண்ட்)கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசின் அனுமதியும் கூட கிடைத்துவிட்டது.

ஒவ்வொரு துறையும் எத்தனை முதுநிலைப் படிப்புகளையும் வேண்டுமானாலும் நடத்தலாம் எனவும்திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள முதுநிலைப் படிப்புகளான எம்.எஸ்சி. (கணிதம்), எம்.பி.ஏ., எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் அறிவியல்,ரிமோட் சென்சிங்), எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்), எம்.ஏ. (நாட்டுப்புறவியல்) மற்றும் எம்.எட். டெக்னாலஜிஆகியவற்றுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மனித உரிமைகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், சமூக அறிவியல், எலெக்ட்ரானிக் மீடியா, மருத்துவசமூகவியல், சுயதொழில் மேம்பாடு, என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட், மக்கள் தொடர்பு மேலாண்மை போன்றடிப்ளமோ படிப்புகளையும், தனிமனித மேம்பாடு சர்டிபிகேட் படிப்பையும் அடுத்த ஆண்டுஅறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார் பொன்னுசாமி.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்திற்கு உலகம் முழுவதும் 44 மையங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+