திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் ஆஜர்
திருச்செந்தூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் திருச்செந்தூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 1990ம் ஆண்டு திருச்செந்தூரில் தமிழர் மறுமலர்ச்சி மன்றம் சார்பில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக 1994ம் ஆண்டு திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் நெடுமாறன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப் பத்திரிக்கையும் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஆறாவது முறையாக நெடுமாறன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்காக கடலூர் சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட நெடுமாறன் பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டு,பின்னர் நேற்று காலை திருச்செந்தூர் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் நீதிபதி பால்துரை முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல் படித்துகாண்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் "நீங்கள் குற்றவாளியா?" என்று நீதிபதி கேட்டார். அதற்குப்பதிலளித்த நெடுமாறன் "இல்லை" என்றார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பால்துரை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் நெடுமாறன் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டு, இன்று காலை கடலூர் சிறைக்குக்கொண்டுசெல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications