கர்நாடக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்
டெல்லி:
கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில் அம் மாநில முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதில் உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
காவிரியில் நீர் விடுமாறு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்து வருகிறார். இதையடுத்து அவர் மீதுஇரண்டு முறை அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்தது தமிழகம்.
முதல் வழக்கில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர் பதிலும் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணைநிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இரண்டாவது வழக்கில் இன்று மீண்டும் கிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் காரே,அரிஜித் பசாயத், சின்ஹா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
கிருஷ்ணா தவிர பாசனத்துறை அமைச்சர் பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா ஆகியோருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. மூவரும் வரும் 22ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நேரில் ஆஜராகவேண்டியதில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை 24ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
முன்னதாக பேசிய தமிழக வழக்கறிஞர் வேணுகோபால், நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் மதிக்கவே இல்லை. ஒரு துளி நீர் கூடவிடவில்லை. ஜூன் மாதம் முதல் கர்நாடகம் செய்து வரும் இந்த அட்டூழியத்தால் குறுவை சாகுபடியும் போய் இப்போது சம்பாபயிரிடவும் முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரூ. 239 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை கர்நாடகம்தான் ஈடுகட்ட வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் இருந்து தனக்கு எதிரான கடும் தீர்ப்பை எதிர்பார்க்கும் கிருஷ்ணா அதை சமாளிக்க இப்போது காவிரி பாசனப்பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இன்று 5வது நாளாக அவரது யாத்திரை தொடர்கிறது. 15ம் தேதி யாத்திரையை கிருஷ்ணராஜ சாகர் அணையில் முடிக்கத்திட்டமிட்டிருந்த அவர் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தால் நாளையே அதை முடித்துக் கொண்டு காரில் அந்த அணைக்குச்செல்கிறார்.
பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக இருக்கும் நிலையில் அரசியல்ரீதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார் கிருஷ்ணா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications