பிரதமரை சந்திக்க நடிகர் சங்கம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய், துணைப்பிரதமர் அத்வானி மற்றும் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரைச் சந்திக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் விஜயகாந்த்தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நெய்வேலி போராட்டத்தை சிறப்பாக முடித்த பின்னர் அடுத்த கட்டமாக, நடிகர் சங்கம் சார்பில் 20 நடிகர்,நடிகைகள் கொண்ட குழு டெல்லி சென்று, வாஜ்பாய் அல்லது அத்வானி மற்றும் சோனியா காந்தி ஆகியோரைச்சந்திக்கவுள்ளோம்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கமாறு கோரி நடிகர் சங்கம் சார்பில் மனுக்களையும்கொடுக்கவுள்ளோம்.
அவர்களைச் சந்திப்பது எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. தேதி கேட்பது தொடர்பான வேலைகள்ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. தேதி முடிவானவுடன் டெல்லி செல்வோம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications