அமெரிக்கா: விசா கேட்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்து குறைய ஆரம்பித்துவிட்டது.இத் தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துவிட்டது. சுற்றுலாமற்றும் உயர் கல்விக்காக அமெரிக்கா விசா கோருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
2001ம் ஆண்டில் அமெரிக்காவில் பணியாற்ற, கல்வி பயில, சுற்றுலா செல்ல, வியாபாரத்துக்காக செல்ல என 1 கோடி பேர் விசாகேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், இந்த ஆண்டு இது 78 லட்சமாகக் குறைந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு மேலும் 20 சதவீத சரிவு ஏற்படும் என வெளியுவுத்துறை கூறியுள்ளது.
நேற்று தான் விசா கட்டணத்தை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது.












Click it and Unblock the Notifications