நாட்டின் அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமே: நிபுணர் தகவல்
மதுரை:
நாட்டில் உள்ள நதிகளை இணைக்க ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய நீர் வழித்துறையிடம் தேசிய நீர்வழித்துறை மேம்பாட்டுக் கவுன்சில் சமர்பித்துள்ளது.
இக் கவுன்சிலின் தலைவரான காமராஜ் இன்று மதுரை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பல்வேறு நிபுணர்களும், பல மாநில தலைமைப் பொறியாளர்களும் இணைந்து இந்தத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.
இத் திட்டம் அமலாக்கப்பட்டால் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும், மின் உற்பத்தி பல மடங்கு பெருகும், மேலும்நாடு முழுவதும் நீர் வழிப் போக்குவரத்தையும் ஏற்படுத்திவிட முடியும்.
இமாலயத்தில் உருவாகும் ஆறுகளையும் நாட்டின் மத்திய பகுதி ஆறுகளையும் தென் பகுதி ஆறுகளையும் நிச்சயம் ஒன்றிணைக்கமுடியும். இமாயல ஆறுகள் 4,500 கி.மீ. தூரம் பயணிக்கின்றன. மத்திய நிலப் பகுதி ஆறுகள் 5.750 கி.மீ தூரமும் தென்னக ஆறுகள்4,625 கி.மீ. தூரமும் பயணிக்கின்றன.
இவற்றை ஒருங்கிணைத்தால் 15,000 கி.மீ. தூரம் பாயும் நதிக் கட்டமைப்பு உருவாகும். இதனைக் கொண்டு தேசிய அளவில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க முடியும். இந்த வகையிலான போக்குவரத்து சுற்றுச் சூழலுக்கும் மிகவும் உகந்தது.
இத் திட்டம் அமலானால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 60,000 மெகாவாட் மின்சாரத்தையும்தயாரிக்க முடியும். 60 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும். நாட்டில் மேலும் 150 மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயம்செய்ய முடியும். சுற்றுலாவும் அதிகரிக்கும்.
இதில் அரசு செலவிட வேண்டியதே இல்லை. தனியாரைக் கொண்டு இத் திட்டத்தை அமலாக்கிவிட முடியும்.
ரூ. 4 லட்சம் கோடிகள் செலவில் அமலாக்கப்படும் இத் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ. 80,000 கோடி வருமானம் கிடைக்கும்.
நீர் ஆதாரம் அதிகரிப்பதால் மாநிலங்களுக்கு இடையிலான நீர் தொடர்பான சண்டைகள் நீங்கும். அரசியல் சட்டத்தின் 246வதுபிரிவின்படி அனைத்து ஆறுகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இத் திட்டத்தை அமலாக்கிவிடமுடியும்.
இத் திட்டம் குறித்த ஆயத்தப் பணிகள் மற்றும் சர்வே பணிகளுக்கு 3 ஆண்டுகள் தேவைப்படும். திட்டமிட்டுவிட்டால் 7ஆண்டுகளில் இதனை நிறைவேற்றிவிட முடியும்.
இத் திட்டத்தால் அஸ்ஸாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஆந்திராவில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைதவிர்க்க முடியும்.
இவ்வாறு காமராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இத் திட்டத்தை அரசியலை மறந்து மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தினால் நாட்டின் வறுமையை ஒழிததுக்கட்டிவிட முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications