லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம்: நெய்வேலியில் மிக பிரம்மாண்ட பேரணி
நெய்வேலி:
நெய்வேலியில் தமிழத் திரையுலகம் மிகப் பிரம்மாணடமான பேரணியை நடத்திக் காட்டியது.
முன்னணி நடிகர்கள் வந்து சேர தாமதமானதால் 3 மணி நேரம் தாமதமாக பேரணியைத் துவக்கினார் பாரதிராஜா.
கடைசியில் கமல், சத்யராஜ், முரளி, கரண், பிரபு, ராதாரவி ஆகியோர் வந்து சேர்ந்தனர். ஆனால், திமுக நடிகர்களைக் ஆரம்பத்தில்காணவில்லை. பின்னர் அவர்களும் வந்து பேரணியில் சேர்ந்து கொண்டனர்.
லட்சக்கணக்கான மக்களுடன் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் பேரணி நடந்தது. பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த இந்தப்பேரணி மாலை 5.15 மணிக்குத் தான் தொடங்கியது.
முன்னணி நடிகர்கள் போராட்ட இடத்துக்கு வந்து சேருவதில் தாமதமானதால் எரிச்சலடைந்த பாரதிராஜா இயக்குனர்கள்,வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய சுமார் ஆயிரம் பேருடன் தனதுபேரணியை துவக்கினார்.
வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று பேரணியில் வந்தவர்களை வாழ்த்தினர். மாடிகளில் எல்லாம் நூற்றுக்கணக்கானமக்கள் திரண்டிருந்தனர். மரங்களில் மீதும் பலர் ஏறி நின்றிருந்தனர். மின்சார போஸ்ட்களையும் விடவில்லை. அதன்மீதும் பலர்ஏறி நின்றிருந்தனர்.
பாரதிராஜா, பாலசந்தர், வைரமுத்து ஆகியோர் முன் செல்ல ஊர்வலம் நடந்தது. மக்கள் வெள்ளத்தில் நடிகர், நடிகைகளின் பஸ்கள்சிக்கிக் கொண்டதால் தான் அவர்களால் உரிய நேரத்தில் வர முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாரதிராஜாவுடன் நெடு நேரம் உட்கார்ந்திருந்த விஜய்காந்த் புறப்பட்டுச் சென்று காவல்துறையினருடன் பேசி மற்ற நடிகர்,நடிகைகளின் பஸ்களை முன்னேறி வரச் செய்தார். பின்னர் தானும் வந்து பேரணியில் கலந்து கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் பேரணி 7.15 மணிக்கு பொதுக் கூட்ட மேடையை அடைந்தது. பின்னர் பாரதிராஜாதலைமையிலான குழுவினர் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்குள் சென்று மின் நிலையத் தலைவர் ஜெயராமனை சந்தித்தனர்.அவரிடம் கர்நாடகத்துக்கு மின்சாரம் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். அந்தமனுவை ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.
அப்போது விஜய்காந்த், சரத்குமார், நெப்போலியன், பாலசந்தர், கமல் ஆகியோரும் இருந்தனர்.
பின்னர் அனைவரும் மீண்டும் பொதுக் கூட்ட மேடைக்கு வந்தனர். அங்கு மூத்த நடிகர்கள் அனைவரும் பேசினர்.
முன்னதாக சென்னையில் இருந்து 700 நடிகர்கள் உள்பட சுமார் 6000 திரையுலகினர் கருப்பு உடை அணிந்து இன்று காலை 6 மணிமுதல் 125 பஸ்களில் நெய்வேலிக்குப் புறப்பட்டனர். பஸ்கள் வரத் தாமதமானதாலும் நடிகர் நடிகையர் வந்து சேரதாமதமானதாலும் காலை 9 மணி வரை நடிகர் சங்கத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்ட வண்ணம் இருந்தன.
பாரதிராஜா தலைமையிலான இயக்குனர்கள் விஜயா ஸ்டுடியோவில் இருந்து புறப்பட்டனர்.
நேற்றிரவு கருணாநிதியை பாரதிராஜா கடுமையாக விமர்சிக்க சண்டைபோட்டபடி தான் திமுக நடிகர்கள் சரத்குமார் தலைமையில்நெய்வேலிக்கு வந்தனர்.
இந்த பஸ்கள் பகல் 1 மணி முதல் கடலூர் வந்து சேர ஆரம்பித்தன. அங்குள்ள கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் கல்லூரியில்அனைவருக்கும் பகல் உணவு வங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் டேபிள், சேர்கள்போட்பட்டிருந்தன.
உணவு எளிமையாக இருந்தால் போதும் என நடிகர் சங்கம் கூறியபோதிலும் அசைவ உணவும் தயாரிக்கப்பட்டிருதது.அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தரான தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி இந்த உணவு செலவுகளை ஏற்றிருந்தார்.
இந் நிலையில் நெய்வேலியில் சன் டிவிக்கு நிகழ்ச்சியைப் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பாரதிராஜாவுக்குஒத்துழைப்பு தர வேண்டாம் என்று சரத்துக்கு திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு பறந்தது.
முன்னதாக விஜய்காந்த் மற்றும் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் நெய்வேலியில் வடலூர்-பண்ருட்டி சாலையில்வடக்குத்து என்ற இடத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து மின் நிலையம் நோக்கி ஊர்வலம் செல்வதாக இருந்தனர்.
ஆனால், நேரம் போய்க் கொண்டே இருந்தது. நடிகர், நடிகைகள் வந்து சேரவில்லை. அவர்களின் பஸ்கள் வழியில் கூட்டத்தில்சிக்கிக் கொண்ட தகவல் வந்தவுடன் பாரதிராஜா தன் சக இயக்குனர்களுடன் ஆலோசித்துவிட்டு ஊர்வலத்தைத்தொடங்கிவிட்டார்.
உடனே விஜய்காந்த் புறப்பட்டுச் சென்று அனைவரையும் மீண்டும் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார். விஜய்காந்த், கமல்உள்ளிட்ட நடிகர்கள் ஒரு லாரியிலும், டி.வி நடிகை, நடிகர்கள் பிற லாரிகளிலும் ஊர்வலத்தின் கடைசியில்சென்றனர். மொத்தம் 8 லாரிகளில் நடிகர், நடிகையர் சென்றனர்.
சுமார் 3 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து என்.எல்.சி. ஆர்ச் கேட்டை அடைந்ததும் நெய்வேலி லிக்னைட்கார்பரேஷன் எல்லைக்குள் நுழைய நடிகர், நடிகைகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. பொது மக்கள்அனுமதிக்கப்படவில்லை.
சென்னையில் இருந்த வந்த நடிகர்களுடன் ஒவ்வொரு பஸ்சிலும் 6 போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர். போராட்டப்பேரணி நடந்த பாதை முழுவதும் 6000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காலி குடங்களுடன் ஆயிரக்கணக்கான பெண்களும் ஊர்வலத்தில் வந்தனர்.
ஸ்பெஷல் கோஷம்:
ஊர்வலத்தில் வரும் பொது மக்கள் சேர்ந்து கர்நாடகத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவண்ணம்உள்ளனர்.
அதில் மிகவும் ரசிக்கும் விதத்தில் கோஷம்,
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...
கெஞ்சிக் கேட்டும் தரவில்லையே எஸ்.எம். கிருஷ்ணா...
பேரணி மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்து முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications