தமாகா பெயர், கொடி, சின்னம் முடக்கம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை முடக்கி வைத்து மத்திய தேர்தல் கமிஷன்உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தமாகா இணைந்தது. அதற்கு முன்பாக தமாகாவின் பெயர்,கொடி, சின்னத்தை முடக்கி வைக்குமாறு கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை பரிசீலித்த தேர்தல் கமிஷன் வாசன் கோரியபடி, தமாகா என்ற பெயரையும், அக்கட்சியின்கொடி, சைக்கிள் சின்னம் ஆகியவற்றை முடக்கி வைத்திருப்பதாக வாசனுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இத்தகவலை காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் தமாகா செய்தித் தொடர்பாளருமான ஞானதேசிகன்தெரிவித்துள்ளார்.
தமாகா, காங்கிரஸில் இணைந்து விட்டாலும், குமாரதாஸ், ஹக்கீம் உள்ளிட்ட ஐந்து தமாகா எம்.எல்.ஏக்கள்சேரவில்லை என்பதும், அவர்களைத் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏக்களாகவே செயல்பட சபாநாயகர் காளிமுத்துஅனுமதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கமிஷன் தமாகாவின் அங்கீகாரத்தை முடக்கிவைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் காளிமுத்து கூறியிருந்தார்.
அதன்படி இந்த ஐந்து எம்.எல்.ஏக்களையும் சட்டசபையில் சபாநாயகர் எங்கு அமர வைப்பார் என்பது ஓரிருநாட்களில் தெரிந்து விடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications