"ஈவ் டீசிங்" பாதிப்பு மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் உதவி: ஜெ. வழங்கினார்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா இன்று தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவிகளை அதேபள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் கொடூரமான முறையில் ஈவ் டீசிங் செய்தான்.
அந்த மாணவிகளின் முகத்தில் அவன் ஆசிட்டை வீசியதால் அவர்களின் முகம் வெந்து போனது. இருவருக்கும்முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம்.
பாதிக்கப்பட்ட அந்த இரண்டு மாணவிகளுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஏற்கனவே கடந்தமாதம் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை இன்றுஅம்மாணவிகளிடம் ஜெயலலிதா வழங்கினார். அவர்களுக்காக செலவான மருத்துவச் செலவுகளுக்காக இந்தத்தொகை அளிக்கப்படுகிறது.
மேலும் அந்த இரண்டு மாணவிகளில் ஒருவருக்கு பல் மருத்துவப் படிப்பிற்கும், மற்றொருவருக்கு நர்சிங்படிப்பிலும் இடங்களை ஒதுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications