"வேசுக்கோ... தீசுக்கோ...": ரத்தம் சொட்டச் சொட்ட நடந்த கத்தி போடும் திருவிழா

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழாநடைபெற்றது.

கோயம்புத்தூர் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில உள்ளது.

ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 15 செட்டிமை மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தினர்.

அதேபோல் நேற்றும் பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழாஊர்வலம் துவங்கியது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ... தீசுக்கோ..." என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் அதையெல்லாம்கண்டுகொள்ளவில்லை.

அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை ஒற்றி வைத்துக் கொண்டு, தொடர்ந்து "வேசுக்கோ...தீசுக்கோ..." என்று ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம்சரியாகிவிடும் என்பது இந்த பக்தர்களின் அபார நம்பிக்கை.

பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்தது. அப்போது அம்மனுக்கு விசேஷ பூஜைநடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+