குழந்தை புதைப்பு விழாவுக்கு போலீஸ் தடை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் குழந்தைகளை உயிருடன் புதைத்து நேர்த்திக்கடனை செலுத்தும் விழாவுக்கு போலீஸார் தடை விதித்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நடந்த சிறுமிகள் புதைப்பு திருவிழாவின் பயங்கரமே இன்னும் மறையாதநிலையில் அதேபோன்ற ஒரு நிகழ்ச்சி சாத்தூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் நடக்க இருந்தது.
ஆனால் போலீஸார் தக்க சமயத்தில் தலையிட்டு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர்.
பாலையூர் கிராமத்தில் உள்ள முத்தாளம்மன் கோவிலில் இரண்டு நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமைதொடங்கியது.
விழாவின் முக்கிய அம்சமாக, நேர்த்திக் கடனுக்காக குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து எடுக்கும்நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாரும், நகராட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி குழந்தைபுதைப்பு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினர்.
நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு குழந்தை புதைப்பு நிகழ்ச்சி இல்லாமலேயே விழா நடந்து முடிந்தது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications