பி.எஸ்.என்.எல். செல்போன் வசதி: வாஜ்பாய் தொடங்கினார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தின் செல்போன் சேவையை பிரதமர் வாஜ்பாய் இன்றுதொடங்கி வைத்தார்.

இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், பி.பி.எல். உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தான் பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்போன் சேவையைத்தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ-ராஜ் பவனில் இந்தச் சேவையைத் தொடங்கி வைத்த வாஜ்பாய், முதன் முதலாகடெல்லியில் உள்ள துணைப் பிரதமர் அத்வானியை பி.எஸ்.என்.எல். செல்போன் மூலம் அழைத்துப் பேசினார்.

இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சியில் வாஜ்பாய் பேசுகையில்,

தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் ஏற்கனவே உலகம் சிறிதாகிக் கொண்டே வருகிறது.

இந்த செல்போன் சேவை மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்றொரு தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப்படைத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சாதனைப் பாதையில் மற்றும் ஒரு மைல் கல்.

முன்பெல்லாம் டெலிபோன் என்பதே பார்ப்பதற்கு அரிதாக விளங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதுஅதுவே மக்களின் அன்றாடத் தேவையாகிவிட்டது. உடனுக்குடன் டெலிபோன் இணைப்பும் தங்கு தடையின்றிக்கிடைக்கிறது.

டெலிபோன்களை விட முதலில் மக்களின் சாப்பாட்டுப் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால் தகவல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துக் கொண்டேவருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

தற்போது நம் நாட்டில் சுமார் ஒரு கோடி மக்கள் செல்போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நினைத்துநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த அளவிற்கு நம் நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதுஎன்றார் வாஜ்பாய்.

முன்னதாக பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையின் முக்கிய வசதிகளைப் பற்றி தகவல் தொடர்புத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் பேசுகையில்,

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தகவல் தொடர்புத்துறையில் பல்வேறுசாதனைகளைப் புரிந்து வருகிறது. அதில் ஒன்று தான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த செல்போன் சேவை.

நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் செல்போன் நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு மட்டும்தான் இணைப்புகளைக் கொடுத்துள்ளன.

ஆனால் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை நாடு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அடுத்த ஆண்டுமார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த செல்போன் சேவைஏற்படுத்தப்படும்.

பி.எஸ்.என்.எல். செல்போனின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் கட்டணம் மிகவும்குறைவு. நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான்குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் செல்போன் சேவையில் நாட்டிலேயே முதல் இடத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெறும் என்பதில்சந்தேகமே இல்லை.

கடந்த 1998ம் ஆண்டு இந்தியாவில் செல்போன் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகத் தான்இருந்தது. இது தற்போது 82 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார் மகாஜன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+