தமிழ் சேனல்கள் "கட்": கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
"கன்னட யுவகர வேதிகே" என்ற அமைப்பைச் சேர்ந்த கன்னட வெறியர்கள் தான் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டிதமிழ் டி.வி. சேனல்களை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
கடந்த 5ம் தேதியிலிருந்தே பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டு விட்டன.
இவ்வாறு தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து பெங்களூர் - ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ஏ.பி. செல்வராஜ்என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர். பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில்,
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது மனித உரிமையை மீறும் செயலாகும். மேலும்இது சட்ட விரோதமானதும் கூட.
இது குறித்து கர்நாடக போலீசாரிடம் புகார் கூறியும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, வரும்24ம் தேதி வரை தமிழ் சேனல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனரே கேபிள்ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஒட்டு மொத்த அரசு எந்திரங்களுமே தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக விதிமுறைகளை மீறியுள்ளன.
எனவே தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
கர்நாடகத்தில் உள்ள தமிழ் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications