அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் சாவு
சென்னை:
தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ்காரர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் பாதுகாப்புக்காக வந்த போலீஸார் இருந்த கார் வந்துகொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் என்ற இடத்தில் கார் வந்தபோது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையோரம்இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக போலீஸார் வந்த கார் மோதியது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் கருணாகரன் என்ற காவலர் பரிதாபமாக இறந்தார்.மேலும் ஒரு ஏட்டு மற்றும் டிரைவர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டு அவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த ஜெயலலிதா உடனடியாக கருணாகரனின் மனைவிக்கு இரங்கல் தெரிவித்துக் கடிதம் அனுப்பினார்.கருணாகரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர காயமடைந்த இரண்டு பேருக்கும் தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications